azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

The day of Sankranti has a special significance. Sankranti means ‘San’ (coming together) and ‘Kranti’ (a big change). The entry of the Sun into Makararasi (Capricorn) heralds the beginning of a great change from this day. It marks the entry into a Divine phase. It signifies the attempt to turn man's mind towards God. It is a day when we pray to the Sun, who is the presiding deity for the eyes, to direct our vision to the pure and the holy, the sacred and the Divine. The real meaning of Purusharthas (goals of human life) is to make use of time and the circumstances as they arise for making one's life meaningful and sublime. We have to effect a remarkable spiritual transformation in the world today. Only then the observance of Makara Sankranti will have a meaning. External changes with no change in one's outlook and attitude will not signify kranti. When we bring about a great spiritual transformation, then there will be real peace. (Divine Discourse, Jan 14, 1985)
The love of God will dispel the ignorance and conceit of man as the sun dispels the morning mist. - BABA
சங்கராந்தி தினத்திற்கு ஓர் தனிச் சிறப்பு உண்டு. சங்கராந்தி என்றால் 'சம்' அதாவது ஒன்றிணைந்து வருவது, மற்றும் 'கிராந்தி' அதாவது ஒரு பெரிய மாற்றம் என்று பொருளாகும். இந்த நாளில் இருந்து சூரியன் மகரராசியில் பிரவேசிப்பது ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. இது ஒரு தெய்வீக கட்டத்திற்கு நகர்வதைக் குறிக்கிறது. மனிதனின் மனதை இறைவனை நோக்கித் திருப்பும் முயற்சியை இது குறிப்பிடுகிறது. கண்களுக்கு அதிபதியான சூரியனிடம் நமது பார்வை, பரிசுத்தமான, புனிதமான, பவித்ரமான மற்றும் தெய்வீகமானவற்றின் மீதே இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்யும் நாள் இது. மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள் எனப்படும் புருஷார்த்தங்களின் உண்மையான பொருள் என்னவெனில், ஒருவருடைய கால சூழ்நிலைகளை வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் உன்னதமானதாகவும் மாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதாகும். இன்று உலகில் குறிப்பிடத்தக்க வகையில் ஆன்மிக மாற்றத்தை நாம் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் மகர சங்கராந்தியை அனுசரிப்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஒருவருடைய பார்வையிலும் அணுகுமுறையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் வெறும் வெளிப்புற மாற்றங்கள் கிராந்தியைக் குறிக்காது. நாம் ஒரு பெரும் ஆன்மிக நல்மாற்றத்தைக் கொண்டு வரும்போது தான் உண்மையான சாந்தி பிறக்கும். (தெய்வீக அருளுரை, ஜனவரி 14, 1985)
ஆதவன் அதிகாலைப் பனியை அகற்றுவதைப் போல, இறைவன்பால் கொள்ளும் ப்ரேமை மனிதனின் அறியாமையையும் அகந்தையையும் அகற்றும். - பாபா