azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

How can tyaga (Sacrifice) develop without Yoga, the control of the agitations of desire, in the mind? You may have air conditioning, but without the conditioning of the mind, how can there be peace? You may control prices, production of steel or cloth, distribution of food grains, and many other things and processes; but unless you have mind control, the rest are barren exercises! Mind control is more heroic and beneficial than any other system of control! A running train cannot be stopped, even if thousands hang on to it and pull it back! But, a tiny button in the engine, when pressed by the driver can bring it to a halt! So too, the mind, if controlled, can bring to a halt all the various functions which are sought to be controlled! Now, enormous time and money are wasted to achieve unessential targets, but, the most important target, namely, mind control is being neglected. Yoga is the name for that system of control. Now, Yoga is neglected; Ud-yoga (job) is being sought after. Udyoga without yoga will be a handicap, a hindrance. (Divine Discourse, Feb 03, 1972)
The first step in controlling the mind consists in impressing upon it the fact that the world is transient and that, consequently, the pleasures derived therein are momentary. - Baba
மனதில் ஏற்படும் ஆசையின் கிளர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் யோகப்பயிற்சி இல்லாமல் தியாகம் எப்படி உருவாகும்? உங்களிடம் குளிர்சாதன வசதி இருக்கலாம், ஆனால் மனதைக் கட்டுப்படுத்தாமல் நிம்மதி எப்படி இருக்கும்? நீங்கள், விலைவாசி, எஃகு அல்லது துணி உற்பத்தி, உணவு தானியங்கள் விநியோகம் போன்ற பல விஷயங்கள் மற்றும் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தலாம்; ஆனால் மனக்கட்டுப்பாடு இல்லாமல் மற்றவை அனைத்தும் பயனற்ற முயற்சிகளே! மனக்கட்டுப்பாடு என்பது மற்ற எந்த கட்டுப்பாட்டு முறையையும் விட வீரம் மிக்கது, நன்மை பயப்பது! ஓடும் ரயிலைப் பிடித்து ஆயிரக்கணக்கானோர் பின்னுக்கு இழுக்க முயற்சித்தாலும் அதை நிறுத்த முடியாது! ஆனால், என்ஜினில் உள்ள ஒரு சிறிய பொத்தானை ஓட்டுநர் அழுத்தினால் ரயிலை நிறுத்தி விடலாம்! அதுபோலவே, மனதைக் கட்டுப்படுத்திவிட்டால், நாம் கட்டுப்படுத்த வேண்டிய பல்வேறு செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட முடியும்! இப்போது, அநாவசியமான இலக்குகளை அடைவதற்கு பெருமளவில் நேரமும் பணமும் விரயமாக்கப்படுகிறது, ஆனால் மிக முக்கியமான இலக்கான மனக் கட்டுப்பாடு புறக்கணிக்கப்படுகிறது. அந்தக் கட்டுப்பாட்டு முறைக்கு ‘யோகம்’ என்று பெயர். யோகம் புறக்கணிக்கப்பட்டு தற்போது உத்தியோகம் தான் தேடப்படுகிறது. யோகம் இல்லாத உத்தியோகம் ஒரு குறையாக, ஒரு தடையாகவே இருக்கும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 03, 1972)
'உலகம் நிலையற்றது; அதன் விளைவாக, அதிலிருந்து பெறப்படும் இன்பங்களும் கணப்பொழுதே நீடிக்கக்கூடியவை' என்ற உண்மையை மனதில் பதிய வைப்பதுதான் மனதைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாகும். - பாபா