azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 05 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 05 Jan 2023 (As it appears in 'Prasanthi Nilayam')

Whatever you do, with yourself or with others, do it, remembering that God is omnipresent. He sees, hears, and knows everything. Whatever you speak, remember that God hears every word; discriminate between the true and the false, and speak only truth. Whatever you do, discriminate between right and wrong and do only the right. Endeavour every moment to be aware of the omnipotence of God. The body is the temple of the individual (jiva), so whatever happens in that temple is the concern of the individual. So too, the world is the body of the Lord, and all that happens in it, good or bad, is His concern! From the observed fact of the individual and their body, know the truth of the unobservable fact of the Lord and the world! The relationship of the individual and God, the kinship between the two, can be grasped by everyone who acquires three chief instruments: (1) a mind unsullied by attachment and hatred, (2) a speech unsullied by falsehood and (3) a body unsullied by violence! (Prema Vahini, Ch 19)
The heart soaked in compassion is verily the altar of God. - Baba
உங்களுக்கோ அல்லது பிறருக்கோ நீங்கள் எதைச் செய்தாலும், பரமாத்மா எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான் என்பதை நினைவில் கொண்டு செய்யுங்கள். அவன் அனைத்தையும் பார்க்கிறான், கேட்கிறான், மேலும் அவனே அனைத்தையும் அறிந்திருக்கிறான். நீங்கள் எதைப் பேசினாலும், பரமாத்மா ஒவ்வொரு வார்த்தையையும் கேட்கிறான் என்பதை நினைவில் கொண்டு, சத்ய-அசத்தியத்தை பகுத்தறிந்து, சத்தியத்தையே பேசுங்கள். நியாய, அநியாயங்களை சீர்தூக்கிப் பார்த்து, நியாயமானதையே செய்யுங்கள். ஒவ்வொரு தருணத்திலும், இறைவனுடைய சர்வவல்லமையைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருக்கப் பாடுபடுங்கள். இந்த தேகமே தனிமனிதனாகிய ஜீவனின் தேவாலயமாகும்; எனவே அதில் நல்லது கெட்டது எது நடந்தாலும், அதை அவன் பார்த்துக் கொள்கிறான். அதைப் போலவே, இந்த உலகம் அந்த லோகேஸ்வரனின் தேகமாகும். இதில் நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்தையும் அவன் அறிவான். தனிமனிதனுக்கும் உடலுக்கும் இடையிலுள்ள கண்ணுக்குப் புலப்படும் உண்மையிலிருந்து, இறைவனுக்கும் உலகிற்கும் இடையிலுள்ள கண்ணுக்குப் புலப்படாத சூட்சுமத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்! இப்படிப்பட்ட ஜீவாத்மாவினுடைய பரமாத்ம சம்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அந்த பரமாத்ம ஆராதனைக்குத் தேவையான மூன்று முக்கிய உபகரணங்களைப் பெறுவதற்கு பக்தர்கள் முயற்சிக்க வேண்டும். அவையே 1) விருப்பு, வெறுப்புகளால் மாசடையாத மனம் 2) அசத்தியத்தால் மாசடையாத வாக்கு 3) இம்சைகளால் மாசடையாத உடல்! ( ப்ரேம வாஹினி, அத்தியாயம்-19)
கருணை தோய்ந்த இதயமே கடவுள் வாழும் ஆலயம். - பாபா