azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 29 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 29 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

If the devotee has dedicated everything - body, mind, and existence - to the Lord, He will Himself look after everything, for He will always be with the devotee! Under such conditions, there is no need for prayer. But have you so dedicated yourself and surrendered everything to the Lord? No! When losses occur, calamities come, or plans go awry, devotees blame the Lord. Some, on the other hand, pray to Him to save them! If you avoid both of these, as well as reliance on others, if you place complete faith in the Lord at all times, why should He deny you His grace? Why should He desist from helping you? People do not rely fully and unswervingly on the Lord. Though you must be the agent and the instrument doing everything, continue to pray with devotion and faith. Faith is the product of peace, not of haste and hurry. For acquiring the Lord’s grace and the resulting awareness of His reality, the quality of peace is the prime need. (Prasanthi Vahini, Ch 7)
God no doubt can help but He expects you to use the strength and talents given to you before seeking Divine help. - Baba
ஒரு பக்தன் தன்னுடைய உடல், மனம், உயிர் ஆகிய எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டால், அப்படிப்பட்டவனின் யோகக்ஷேமத்தை இறைவனே பார்த்துக் கொள்வான்; இறைவன் எப்போதும் அவனுடனேயே இருப்பான்! இப்படிப்பட்ட நிலையில் பிரார்த்திப்பதற்கு அவசியமே இருக்காது. ஆனால் நீங்கள் அனைத்தையும் அவனுக்கு அர்ப்பணித்துவிட்டு, எப்போதும் சரணடைந்தவர்களாக இருக்கிறீர்களா? இல்லையே! பக்தர்களுக்கு கஷ்டகாலம், நஷ்டகாலம் வந்தாலோ அல்லது விருப்பங்கள் நிறைவேறாமல் போனாலோ இறைவனை நிந்திப்பார்கள். சிலர் அந்த சமயங்களில் தங்களைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரார்த்திப்பார்கள்! இந்த இரண்டையும் தவிர்த்து, பிறரை எந்தவிதத்திலும் சார்ந்திராது, முழுமையாக இறைவனே சரணம் என்றிருந்தால், ஏன் இறைவன் உங்களுக்கு அருள மாட்டான்? ஏன் எந்த உதவியும் செய்யாமல் இருக்கப்போகிறான்? மனிதர்கள் எப்போதும் முழுமையாக ஏகபாவத்துடன் பரமாத்மாவைச் சார்ந்திருப்பதில்லை. ஆனால், அனைத்தும் அவனே செய்கிறான் என்றும், நீங்கள் வெறும் கருவியே என்றும் உணர்ந்து, பக்தி சிரத்தையுடன் தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். அப்படிப்பட்ட திடநம்பிக்கை, சாந்தியுடன் இருப்பதால் கிடைக்கக்கூடியதாகும், அவசரப்படுவதால் அல்ல. இறைவனுடைய அனுக்கிரஹத்தையும், அதிலுள்ள யதார்த்தத்தையும் பெறுவதற்கு சாந்தியே பிரதானமாகும். (பிரசாந்தி வாஹினி, அத்தியாயம்-7)
இறைவன் உதவுவான் என்பதில் சந்தேகமில்லை; ஆனால், இறைவனுடைய உதவியை நாடுவதற்கு முன், உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சக்தியையும் திறன்களையும் நீங்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். - பாபா