azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual aspirants have to direct their attention away from the external world and become in-sighted; they have to turn their vision toward the Atma. They must analyse the processes of the mind and discover for themselves the origin of all the modifications and agitations of the mind. By this means, every trace of “intention” and “will” has to disappear. Afterwards, the only idea that will get fixed in the mind will be the idea of Brahman. The only feeling that will occupy the mind will be the feeling of bliss, which arises out of its establishment in the stage of being-awareness-bliss (satchidananda). Such spiritually wise people (jnanis) will be unaffected by joy or grief, for they will be fully immersed in the ocean of Atmic bliss (Atma-ananda), above and beyond the reach of worldly things. (Jnana Vahini, Ch 5)
The Jnanis (spiritually wise) who have had a vision of the Atma in them will never suffer sorrow. - Baba
ஆன்மிக சாதகர்கள் தங்களுடைய கவனத்தை புறவுலகிலிருந்து விலக்கி அக நோக்குள்ளவர்களாக, ஆத்மா மீது தங்களது பார்வையைத் திருப்ப வேண்டும். மனதில் தோன்றுபவற்றை ஆராய்ந்து, அதன் மாற்றங்களும், கலக்கங்களும் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்பதைக் கண்டறிந்து கிரகித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் அனைத்து சங்கல்பங்களும் நாசமடைந்துவிடும். அதன் பின்னர் பரப்ரம்மத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே நிரந்தரமாக மனதில் நிலைத்து நிற்கும். அதன் காரணமாக, சாதகருக்கு சச்சிதானந்த நிலையின் பேரானந்தம் மட்டுமே மனதில் நிலைகொண்டிருக்கும். அப்படிப்பட்ட ஞானிகள் சுக துக்கங்களால் பாதிக்கப்படாமல், ஆத்மானந்த சாகரத்தில் முழுமையாக ஆழ்ந்திருந்து உலக விஷயங்களுக்கு அப்பாற்பட்டு இருப்பார்கள். (ஞான வாஹினி, அத்தியாயம்-5)
தங்களுள் ஆத்ம தரிசனம் பெற்ற ஞானிகளுக்கு துன்பம் என்றொன்று ஒருபோதும் இருக்காது. - பாபா