azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 08 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 08 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

True dharma is to be immersed in Atmic bliss, to have the inner vision, the steady faith in the identity of one’s real nature with the Absolute, and the realisation that all is Brahman - these four are the authentic dharma. In this physical existence as particular individuals, these four are named truth, peace, love, and nonviolence for the convenience of practice of this inner dharma of Atmic reality, so that all individuals, who are also personifications of that Absolute, can follow them in daily life. The mode of pursuit of dharma, now, as in the past, is to adhere to these high principles in every act and thought. These, the fundamental and the derived, must be coordinated and harmonised. Then only can it be termed Atma-dharma. It does not matter what your activity is or what name and form you have chosen. A chain is a chain whatever the material; it binds whether it is iron or gold, doesn’t it? So too, whether the work is of this type or that, as long as the Atma-dharma is the base and the Absolute Principle (Atma-thathwa) is the root, it is dharma, beyond doubt. Such work will bless one with the fruit of peace. (Dharma Vahini, Ch 2)
Until the fundamental secret of the Atma is recognized, the outer state of bondage will persist. - Baba
ஆத்மானந்தத்தில் ஆழ்ந்திருத்தல், அகப்பார்வை, பரமாத்மாவுடனான தனது உண்மையான இயல்பில் நிலையான நம்பிக்கை, அனைத்தும் பரப்ரம்மமே என்ற உணர்வு ஆகிய நான்கே உண்மையான தர்மமாகும். பரமாத்ம ஸ்வரூபங்களாக இருக்கும் மனிதர்கள் அனைவரும் இந்த அக ஆத்ம தர்மத்தை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு ஏற்ப இந்த நான்கும், சத்யம், சாந்தி, ப்ரேமை மற்றும் அஹிம்சை என அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு செயலிலும் சிந்தனையிலும், இந்த நான்கு மஹாசித்தாந்தங்களைக் கடைப்பிடிப்பதே அன்றும் இன்றும் உள்ள தர்மமாகும். அடிப்படையில், முதலில் கூறப்பட்ட நான்குதான் தற்போது சத்யம், சாந்தி, ப்ரேமை அஹிம்சை என அழைக்கப்படுகின்றன; இவை ஒருங்கிணைக்கப்பட்டு இவற்றுள் தர்மம் ஒத்திசைவாக ஆக்கப்படும்போது தான் அதை ஆத்மதர்மம் என்று சொல்ல முடியும். நீங்கள் ஆற்றும் பணி அல்லது தேர்ந்தெடுத்துள்ள நாமரூபம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கைகளைக் கட்டிப்போடும் சங்கிலி இரும்பாக இருந்தாலென்ன, தங்கமாக இருந்தாலென்ன? கைகளைப் பிணைக்கத்தானே செய்கிறது? அதேபோல, ஆத்ம தர்மத்தையும் ஆத்மதத்துவத்தையும் அனுசரித்தால் எந்தக் கர்மாவும் தர்மமே. அத்தகைய கர்மா, சாந்தி எனும் பலனைத் தரும். (தர்ம வாஹினி, அத்தியாயம்-02)
அடிப்படை ஆத்ம ரகசியத்தை உணராத வரை புறவுலக பந்தங்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். - பாபா