azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 07 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 07 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind, intellect, and senses are ever bent towards exterior objects; they are perpetually turned outward! When some sound from the external world strikes it, the ear hears it. As soon as the ear hears it, the eye sees it. When the eye sees it, the mind desires it. Immediately, the intellect approves the idea and sets to acquire it as quickly as possible. Thus, every sense runs after external objects one after another, one supporting another, restless and miserable. One must bring the mind, reasoning faculty, and senses under control, for they roam aimlessly after objective pleasures. One must train them to take on the task of concentrating all attention on the glory and majesty of God to follow one systematic course of one-pointed discipline. Bring them all and lead them towards the higher path. They must be educated by repetition of the Name (japa), meditation (dhyana), good works, or dedicatory and elevating activity that purifies. (Bhagavatha Vahini, Ch 31)
When the inner consciousness has been rendered pure and unsullied, God will reside therein. - Baba
மனம், புத்தி மற்றும் புலன்கள் எப்போதும் புறவுலகப் பொருட்களின் சுகங்களைப் பெறுவதையே நாடுகின்றன! புறவுலகிலிருந்து ஏதாவது சப்தம் கேட்டால், காது அதைக் கேட்கிறது. காது கேட்டவுடனே கண்கள் அதைக் காண முயலுகின்றன. அதைக் கண்கள் கண்ட உடனே மனம் அந்தப் பொருள் வேண்டும் என ஆசைப்படுகிறது. புத்தி அந்தக் கருத்தை உடனே ஆமோதித்து, அந்தப் பொருளைப் பெறுவதற்கான வழிகளைத் தீவிரமாக ஆலோசிக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு புலனும் ஒன்றன்பின் ஒன்றாக புற உலகின் பொருட்களின் பின்னால் நாய்களைப் போன்று அலைந்து திரிந்து சாந்தியும், சௌக்கியமுமின்றி துன்பப்படுகின்றன. புறவுலக சுகங்களின் பின்னால் வெட்கமின்றித் திரியும் மனதையும் புத்தியையும் ஒருவர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். முழு கவனத்துடன் இறைவனின் பெருமையையும் மஹிமையையும் போற்றும் விதமாக முறையாக ஒருமுகப்படுத்துவதற்கு அவற்றிற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அவை அனைத்தையும் ஒன்றுசேர்த்து உத்தமமான பாதையில் இட்டுச் செல்லுங்கள். ஜபம், தியானம், நற்கருமங்கள் அல்லது ஏதாவது பவித்திரமான செயல்களில் ஈடுபடுவதற்கு அவற்றிற்கு போதிக்க வேண்டும். (பாகவத வாஹினி, அத்தியாயம்-31)
அந்தராத்மா களங்கமின்றி பரிசுத்தமடையும்போது இறைவன் அதில் குடிகொள்கிறான். - பாபா