azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 04 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 04 Dec 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Spiritual learning impels one to pour one’s narrow ego into the sacrificial fire and foster in its place universal love, which is the foundational base for the superstructure of spiritual victory. Love that knows no limits purifies and sanctifies the mind. Let the thoughts centre around God, let the feelings and emotions be holy, and let activities be the expression of selfless service. Let the mind, heart and hand be thus saturated in good. Spiritual education has to take up this task of sublimation. It must first instil the secret of service. Service rendered to another has to confer full joy in all ways. Spiritual education must emphasise that in the name of service (seva), no harm, pain, or grief should be inflicted on another. While rendering service, the attitude of its being done for one’s own satisfaction should not tarnish it. Service has to be rendered as an essential part of the process of living itself. This is the real core of spiritual education (vidya). (Vidya Vahini, Ch 8)
People don’t recognise the truth that spiritual, moral, and behavioural values are the very crown of human achievement. - Baba
வித்யா எனும் ஆன்மிகக் கல்வி ஒருவரை தன் அகந்தையை வேள்வித் தீயில் இட்டு எரித்து, அங்கு பிரபஞ்சமயமான ப்ரேமையை பேணுவதற்கு உந்துகிறது; இதுவே ஆன்மிக வெற்றி எனும் மாளிகைக்கான அஸ்திவாரமாகும். எல்லையற்ற ப்ரேமை, மனதை பரிசுத்தப்படுத்தி புனிதமாக்குகிறது. சிந்தனைகள் இறைவனை மையமாகக் கொண்டிருக்கட்டும், உணர்வுகளும், உணர்ச்சிகளும் புனிதமானவையாக இருக்கட்டும், செயல்கள் தன்னலமற்ற சேவையின் வெளிப்பாடாக இருக்கட்டும். இவ்வாறு மனம், இதயம் மற்றும் கரங்கள் நல்லவற்றால் நிறைந்திருக்கட்டும். ஆன்மிகக் கல்வி இந்தப் புடம் போடும் பணியை ஏற்க வேண்டும். முதலில், இந்த சேவை உணர்வின் ரகசியத்தை மனதில் அது பதிய வைக்க வேண்டும். மற்றவருக்கு ஆற்றும் சேவை எல்லாவிதத்திலும் முழுமையான ஆனந்தத்தை அளிக்க வேண்டும். சேவை என்ற பெயரில் எந்தத் தீங்கும், வேதனையும் துக்கமும், மற்றவருக்கு ஏற்படுத்தக் கூடாது என்பதை ஆன்மிகக் கல்வி வலியுறுத்த வேண்டும். சேவை ஆற்றும்போது தன்னுடைய சொந்த திருப்திக்காகவே செய்யப்படுகிறது என்ற உணர்வால் அதை களங்கப்படுத்தக் கூடாது. சேவை என்பது வாழ்வின் ஓர் இன்றியமையாத அங்கமாகக் கருதி செய்யப்பட வேண்டும். வித்யா எனும் ஆன்மிகக் கல்வியின் உண்மையான அடிப்படை இதுதான். (வித்யா வாஹினி, அத்தியாயம்-8)
மனிதன் சாதிக்க வேண்டியதில் ஆன்மிக, ஒழுக்க மற்றும் நன்னடத்தைப் பண்புகளே மகுடம் போன்றது என்ற உண்மையை மக்கள் உணருவதில்லை.. - பாபா