azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 25 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 25 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

People boast that they have been coming to Puttaparthi for 20, 15 or 10 years as if we have some grades of senior or junior. Really speaking, one has to value only the beneficial changes brought about by that contact in the character and conduct of the individual. How much have you imbibed the lessons learnt from here? How much have you succeeded in stopping the leaks as the outward-faced senses were draining your discrimination and drying up the fountain of inner joy? Eyes scatter your vision in hundred directions; ears drag your mind to many false melodies; hands hanker after hundred flimsy acts; these degrade and demolish man! Man being divine must have divine all around him, all the time, to be alive; like fish, he must have the water of divine joy all around him! Instead, he is now seeking to keep himself alive by artificial respiration and borrowed blood. (Divine Discourse, Nov 23, 1965)
Limit, control, regulate, set bounds and bunds - that is the way to succeed. - Baba
நாம் ஏதோ சீனியர், ஜூனியர் என்று சில இங்கு தராதரங்களை வைத்திருப்பதைப் போல, நாங்கள் 20, 15, 10 வருடங்களாக புட்டபர்த்திக்கு வருகிறோம் என்று மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். உண்மையில் சொல்லப்போனால் இத்தகைய தொடர்பினால் பயன்தரும் மாற்றங்கள் நடத்தையிலோ குணநலன்களிலோ ஏற்பட்டதை மட்டுமே ஒருவர் மதிப்பில் கொள்ள வேண்டும். இங்கிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை நீங்கள் எந்த அளவுக்கு மனதில் கொண்டிருக்கிறீர்கள்? புறம் சார்ந்த புலன்கள் உங்கள் விவேகத்தில் ஏற்படுத்தும் கசிவுகளை நிறுத்துவதிலும், அக ஆனந்த ஊற்று வற்றிப்போவதை தடுப்பதிலும் நீங்கள் எந்த அளவு வெற்றி பெற்றிருக்கிறீர்கள்? கண்கள் உங்கள் பார்வையை நூறு திசைகளில் சிதறடிக்கின்றன; காதுகள் உங்கள் மனதை பொய்மையான இசைக்கு இழுக்கின்றன; கைகள் நூறு தகாத செயல்களைச் செய்ய ஏங்குகின்றன; இவை மனிதனை தரம்தாழ்த்தி அழிக்கின்றன. மனிதன் தெய்வீகமானவனாதலால் அவன் வாழ்வதற்கு அவனைச் சுற்றி எல்லா நேரமும் தெய்வீகம் இருக்க வேண்டும்; மீனைப் போல, தெய்வீக ஆனந்தமாகிய நீர் அவனைச் சூழ்ந்திருக்க வேண்டும். மாறாக, இப்போது செயற்கை சுவாசத்தினாலும், தானம் பெற்ற ரத்தத்தினாலும் தன்னை உயிருடன் வைத்திருக்க முற்படுகிறான். (தெய்வீக அருளுரை, நவம்பர் 23, 1965)
வரையறை, கட்டுப்பாடு, ஒழுங்குமுறை, வரம்புகள் மற்றும் எல்லைகளை வகுத்துக்கொள்ளுதல் - இவையே வெற்றிக்கான வழியாகும். - பாபா