azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 21 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 21 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Service rendered must be free of the slightest trace of narrow selfishness. But that isn’t enough. The thought of service should not be marred by the desire for something in return. You have to perform the service as you would perform an important sacrifice (yajna). Just as trees don’t eat their fruits but offer them to be eaten by others in an attitude of detachment; just as rivers, without drinking the waters they carry, quench the thirst and cool the heat from which others suffer; just as cows offer their milk, produced primarily for their calves, in a spirit of generosity born of renunciation (tyaga), to be shared by others; so too, those who have acquired spiritual knowledge should offer it to others prompted by the motive of service and without consideration of selfish interests. Only thus can they justify their status as noble men (sajjana). The authentic scholar should not entertain egotism in their thoughts, at any time! (Vidya Vahini, Ch 15)
Education is rendered noble when the spirit of service is inculcated. - Baba
பிறருக்கு ஆற்றும் சேவையில் எள்ளளவும் சுயநலமோ, குறுகிய மனப்பான்மையோ இருக்கக் கூடாது. அது மட்டுமல்ல. சேவை உணர்வோடு பிரதிபலனை எதிர்பார்க்கக்கூடாது. எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது, சேவை என்பது பிரதானமான யக்ஞம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எவ்வாறு மரங்கள் தங்களுடைய பழங்களைத் தாங்களே உண்ணாமல் தியாக உணர்வோடு பிறர் உண்பதற்கு அளிக்கின்றனவோ, எவ்வாறு நதிகள் தங்களுடைய நீரைத் தாங்களே அருந்தாமல் பிறரின் தாகத்தைத் தீர்ப்பதற்கும் அவர்களை வருத்தும் வெப்பத்தைத் தணிப்பதற்கும் கொடுக்கின்றனவோ, எவ்வாறு பசுக்கள் தங்கள் கன்றுகளுக்காகவே சுரக்கும் பாலை தியாக உணர்வோடு பெருந்தன்மையாக பிறருடன் பகிர்ந்து கொள்கின்றனவோ, அதைப் போல, ஆன்மிக ஞானம் பெற்றவர்கள், சுயநலம் கருதாது, சேவை உணர்வால் உந்தப்பட்டு அதை மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் நல்ல மனிதர்கள் என்ற பெயருக்கு உகந்தவர்களாக இருக்க முடியும். உண்மையான கற்றறிந்தவருக்கு சுயநலம் என்பது ஒருபோதும் அவர்களுடைய சிந்தையில் கூட இருக்கக்கூடாது! (வித்யா வாஹினி, அத்தியாயம்-15)
சேவை மனப்பான்மையுடன் கூடிய கல்வி உன்னதமானது. - பாபா