azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 13 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 13 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The power of the Divine Name is unparalleled. People often take it lightly. That is a mistake. One should not mistake a shining glass piece to be a diamond. The real diamond is altogether different. What is that diamond? ‘Die mind’. God’s name is the real diamond. Keep it safe and secure. Do not ever be bothered by pain and suffering, losses and difficulties. They just come and go. That is not your real nature. Your innate Self is strong, eternal and real. You should not follow the fleeting and unreal waves, forsaking your own true and eternal nature. Unfortunately today people are following only unreal and passing waves. If you hold on to such fleeting and unreal things, you will always be deceived! Once you seek refuge in the lotus feet of God, you should never give up. Wherever you go, the divine feet will protect you. If you install the divine name firmly in your heart, your life will become sanctified. That is bhakti (devotion). That is your shakti (power). That is mukti (liberation). (Divine Discourse, Nov 13, 2007)
You can give up everything but never give up God! Never forget God! Engrave this lesson in your hearts. - Baba
இறைவனது தெய்வீகத் திருநாமத்தின் சக்திக்கு ஈடு இணையே இல்லை. மக்கள் பெரும்பாலும் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அது தவறு. பளபளக்கும் கண்ணாடித் துண்டை தவறாக வைரம் என ஒருவர் கருதக் கூடாது. உண்மையான வைரம் முற்றிலும் வேறுபட்டது. அந்த வைரம் - DIAMOND என்பது எது? ‘DIE MIND’ - அதாவது மனம் அழிவதே. இறைவனது திருநாமமே உண்மையான வைரம் ஆகும். எனவே, அதைப் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக் கொள்ளுங்கள். துன்பங்கள் - துயரங்கள், இழப்புகள் - இன்னல்கள் ஆகியவற்றால் ஒருபோதும் கவலை கொள்ளாதீர்கள். அவை வரும், போகும். அது உங்களுடைய உண்மையான இயல்பு அல்ல. உங்களுடைய உள்ளுறையும் ஆத்மா வலிமையானது, நிரந்தரமானது, சத்தியமானது. உங்களுடைய நித்ய, சத்திய இயல்பை விட்டுவிட்டு, தாற்காலிகமான, அசத்தியமான அலைகளை நீங்கள் பின்பற்றக்கூடாது. துரதிருஷ்டவசமாக, இன்று மக்கள் அசத்தியமான, கலைந்து செல்லும் அலைகளையே பின்பற்றிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தாற்காலிகமான, அசத்தியமான அலைகளைப் பற்றிக்கொண்டு இருந்தால், நீங்கள் எப்போதும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்! நீங்கள் இறைவனின் திருப்பாத கமலங்களில் தஞ்சம் புகுந்தவுடன், அதை விட்டு ஒருபோதும் விலகக் கூடாது. நீங்கள் எங்கு சென்றாலும் இறைவனது திருப்பாதங்கள் உங்களைக் காக்கும்! இறைவனது திருநாமத்தை இதயத்தில் உறுதியாகப் பிரதிஷ்டை செய்துவிட்டால் உங்கள் வாழ்க்கை புனிதமாகி விடும். அதுவே பக்தி. அதுவே உங்களின் சக்தி. அதுவே முக்தியும் கூட. (தெய்வீக அருளுரை, நவம்பர் 13, 2007)
நீங்கள் எல்லாவற்றையும் விட்டுவிடலாம், ஆனால் இறைவனை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். இறைவனை ஒருபோதும் மறவாதீர்கள்! இந்தப் பாடத்தை உங்கள் இதயங்களில் ஆழப்பதிய வைத்துக் கொள்ளுங்கள். - பாபா