azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 09 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 09 Nov 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Embodiments of Love! Only when we realise the preciousness of the diamond will we take care to safeguard it. Likewise only when we are aware of the value of chanting the Lord's name will we make the effort to practise it and benefit from it. Not all realise the potency and efficacy of reciting the Lord's name. The first requisite is the purity of thought, word and deed. The name that is uttered by the tongue should be meditated upon by the mind. What is uttered and dwelt upon should be hailed by clapping the hands. This threefold concentration on the Divine name - unity of mind, speech and action - purifies the heart and nourishes the feeling of devotion. Better than recounting the qualities of the Lord, singing His glories or relating His exploits and teachings, the chanting of the name is supremely edifying. (Divine Discourse, Nov 08, 1986)
Remember that there is nothing in this world as powerful as the Lord's name to protect it. - Baba
ப்ரேமையின் திருவுருவங்களே! வைரத்தின் மதிப்பை அறிந்த பிறகுதான் நாம் அதைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டுவோம். அவ்வாறே இறைநாமஸ்மரணையின் மதிப்பை நாம் உணர்ந்தால் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தி அதனால் பயனடைய முயற்சிப்போம். இறைநாமஸ்மரணையின் ஆற்றலையும் பலனையும் அனைவரும் உணர்வதில்லை. இதன் முதன்மைத் தேவை ‘திரிகரண சுத்தி’ - சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் தூய்மையே. நாவினால் உச்சரிக்கப்படும் திருநாமத்தை மனதால் தியானிக்க வேண்டும்; உச்சரித்து தியானிக்கப்படுவதை கைகளால் தாளம் போடவேண்டும். தெய்வீகத் திருநாமத்தின் மீதான இந்த திரிகரண சுத்தி, அதாவது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றின் ஒற்றுமை, இதயத்தைத் தூய்மைப்படுத்தி பக்தி உணர்வைப் பேணுகிறது. இறைவனின் அருட்குணங்களை வர்ணிப்பது, அவனுடைய பெருமைகளைப் பாடுவது, அவனது லீலைகள் மற்றும் போதனைகளைப் பற்றிப் பேசுவது ஆகியவற்றையெல்லாம் விட, இறைநாமஸ்மரணையே மிகவும் மேன்மை வாய்ந்ததாகும். (தெய்வீக அருளுரை, நவம்பர் 08, 1986)
உலகைக் காப்பதற்கு இறைவனது திருநாமத்தைப் போன்று சக்தி வாய்ந்தது வேறெதுவும் இவ்வுலகில் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். - பாபா