azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 31 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 31 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The organisations named after Me are not to be used for publicising My name, or creating a new cult around My worship. They must try to spread interest in japam (recitation of God's Name), dhyanam (meditation) and other sadhanas (spiritual practices), which lead man Godward; they must demonstrate the joy derivable from bhajan (devotional group singing) and Namasmarana (remembering God's Name), and the peace that one can draw from satsang (good company). They must render service to the helpless, the sick, the distressed, the illiterate and the needy. Their selfless service (Seva) should not be exhibitionistic; it must seek no reward, not even gratitude or thanks from the recipients. Seva is Sadhana, not a pastime of the rich and well placed. Each one must realise his own truth. That is the purpose of all the teaching, all the curing, all the counseling, all the organising, and all the advising that I do. (Divine Discourse, Feb 23, 1968)
I am the person who has come to give, not to receive. And, what you can offer Me is just this - Pure, unadulterated Love. - Baba
என் பெயரைத் தாங்கிய நிறுவனங்களை, என் பெயரை விளம்பரப்படுத்துவதற்கோ அல்லது என்னை ஆராதிக்கும் ஓர் புதிய மதப்பிரிவை உருவாக்குவதற்கோ பயன்படுத்தக்கூடாது. அவை, மனிதனை இறைவனிடம் இட்டுச் செல்லவல்ல, ஜபம், தியானம் மற்றும் பிற ஆன்மிக சாதனைகளில் ஆர்வத்தைப் பரப்ப முயற்சிக்க வேண்டும்; பஜனை, இறை நாமஸ்மரணை ஆகியவற்றிலிருந்து பெறக்கூடிய ஆனந்தத்தையும், சத்சங்கத்திலிருந்து பெறக்கூடிய சாந்தியையும் எடுத்துக்காட்டுவதாக இருக்க வேண்டும். ஆதரவற்றோர், நோயுற்றோர், துன்புறுவோர், கல்வியறிவற்றோர், ஏழை எளியோர் ஆகியோருக்கு சேவை செய்ய வேண்டும். அத்தகைய தன்னலமற்ற சேவை விளம்பர நோக்கமுடையதாக இருக்கக் கூடாது; பயனாளிகளிடமிருந்து எந்த வெகுமதியையோ, ஏன் நன்றியுணர்வையோ நன்றியையோ கூட எதிர்பார்க்கக்கூடாது. சேவை என்பது ஆன்மிக சாதனையே அன்றி, பணக்காரர்கள் அல்லது வசதிபடைத்தவர்களின் பொழுதுபோக்கு அல்ல. ஒவ்வொருவரும் தத்தம் உண்மை நிலையை உணர வேண்டும். நான் போதிப்பது, குணப்படுத்துவது, ஆலோசனைகள் வழங்குவது, ஏற்பாடுகள் செய்வது, அறிவுறுத்துவது - இவை அனைத்தின் நோக்கம் இதுதான். (தெய்வீக அருளுரை பிப்ரவரி 23, 1968)
நான் கொடுப்பதற்கு வந்தவனே அன்றி பெறுவதற்கு வந்தவன் அல்ல. மேலும், நீங்கள் எனக்கு அளிக்க வேண்டியதெல்லாம் பரிசுத்தமான கலப்படமற்ற ப்ரேமை மட்டுமே. - பாபா