azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 28 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 28 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Service is the best cure for egoism; so engage in it to relieve pain and grief to the extent that you can. In the Ramayana, apes brought huge rocks and threw them into the sea to build a passage across for Rama and His army; the tiny squirrel too helped, as far as it could - it rolled on the sands on the seashore, ran towards the heap piled as part of the passage, whisked the sand from its fur by a vigorous shake, and added only a pinch of material to the quantity heaped by the giant apes. Rama saw the squirrel and appreciated its devotion; He took it fondly in His palm and blessed it by stroking its back tenderly. That was ample reward. The squirrel race has since acquired three lines on its back to indicate that sign of gratification and grace. Try to assuage, as far as you can, the distress of others; it is the best sadhana for the aspirant. (Divine Discourse, Jan 13, 1968)
Service tends to destroy egoism; it confers enormous joy. By devoting your skills to service, you are rendered pure. - Baba
சேவையே, அகந்தையைக் குணப்படுத்துவதற்கான அருமருந்தாகும்; எனவே, உங்களால் முடிந்தவரை துன்பத்தையும் துயரத்தையும் துடைப்பதற்கு அதில் ஈடுபடுங்கள்! ராமாயணத்தில், ஸ்ரீராமரும் அவரது படையும் கடப்பதற்கான பாலத்தை அமைப்பதற்காக, வானரங்கள் பெரும் பாறைகளைக் கொண்டு வந்து கடலில் வீசின; சின்னஞ்சிறு அணிலும் கூட, தன்னால் முடிந்தவரை உதவி புரிந்தது; அது கடற்கரை மணலில் புரண்டு எழுந்து, பாலம் கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மணற்குவியலுக்கு ஓடி, தன் உடலில் ஒட்டியிருந்த மணலை நன்றாக உதறி, பெருத்த வானரங்கள் குவித்திருந்த மணற்குவியலில் துளியளவு மட்டுமே சேர்த்தது. ஸ்ரீராமர் அணிலை கவனித்து அதன் பக்தியை மெச்சினார்; அதை அன்புடன் எடுத்து அவரது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு அதன் முதுகை இதமாகத் தடவி ஆசீர்வதித்தார். அதுவே போதுமான பரிசாக இருந்தது. அன்றிலிருந்து அணிலின் இனமே, அந்த நன்றியுணர்வு மற்றும் அருளின் அடையாளமாக அவற்றின் முதுகில் மூன்று கோடுகளைப் பெற்றது! உங்களால் முடிந்தவரை பிறரின் துன்பத்தைத் துடைக்க முயலுங்கள்; அதுவே சாதகனுக்கான மிகச் சிறந்த ஆன்மிக சாதனையாகும்! (தெய்வீக அருளுரை, ஜனவரி 13, 1968)
சேவை அகந்தையை அழிக்கிறது; அது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. உங்களுடைய திறமைகளை சேவைக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நீங்கள் தூய்மையாக்கப்படுகிறீர்கள். - பாபா