azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 18 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 18 Oct 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Questions may be asked and doubts expressed by many about the state of a person after attaining fulfillment, the fullness of awareness. The person’s life will be saturated with unexcelled divine bliss (ananda). The person will experience oneness of thought, emotion, and knowledge with all. The person will be in ecstasy, immersed in the One and Only, the eternal divine Principle, for that alone can confer joy during the process of living. Genuine joy is this and no other. God is the embodiment of eternal ever-full joy. Those loyal to Indian (Bharatiya) culture, whatever sect or faith they claim as their special mould, accept this axiom: God is the highest source of joy. This conclusion (matha) they accept as the dearest and most pleasurable (abhimatha). (Sathya Sai Vahini, Ch 2)
If one knows oneself, one attains bliss. - Baba
பரிபூரணத்துவமான மெய்யுணர்வை அடைந்தபின் ஒருவருடைய நிலை என்ன ஆகும் என்பதைப் பற்றி பலர் கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பக்கூடும். அப்படிப்பட்டவரின் வாழ்க்கை அளப்பரும் தெய்வீக பேரானந்தத்தால் நிறைந்திருக்கும். அவர் அனைவருடனும் சிந்தனை, உணர்வு, அறிவு ஆகியவற்றின் ஏகத்துவத்தை அனுபவிப்பார். ஒன்றேயான அந்த அனந்த பரமாத்ம தத்துவத்தில் மூழ்கி, அவர் ஆனந்தப் பரவசத்தில் ஆழ்ந்திருப்பார்; ஏனெனில் அது மட்டுமே வாழ்க்கையில் ஆனந்தத்தை அளிக்க வல்லதாகும். உண்மையான சுகம் இதுவே, வேறெதுவும் இல்லை. இறைவனே சாஸ்வதமான சுகஸ்வரூபன். பாரத கலாசாரத்தைப் பின்பற்றுவோர் அனைவரும், அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவராக இருந்தாலும், இறைவனே பேரானந்தத்தின் மூலாதாரம் என்ற சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த முடிவை, அதாவது மதத்தை, மிகவும் பிரியமான மற்றும் உன்னத சுகம் தரும் அபிமதமாக ஏற்றுக்கொள்கிறார்கள். (சத்ய சாயி வாஹினி, அத்தியாயம்-2)
தன்னை ஒருவர் உணர்ந்து விட்டால், அவர் பேரானந்தத்தை அடைகிறார். - பாபா