azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 24 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 24 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

With regard to anger, spiritual aspirants have to be vigilant even about the most minor matters that might provoke them, because if they are careless, they cannot progress in the least. Such people must cultivate a humble and loving spirit. Then the bad traits will disappear. Some aspirants become very angry when someone discovers and announces to them the bad traits they possess. This makes matters worse! Aspirants must always have the inward look; if they allow the mind to wander outward, they cannot identify their own faults. Pride prevents the inward look and confuses the examination of the mind. When aspirants want to achieve success, they must bow down to those who point out their faults. That is the way to progress quickly in the path of meditation. And they must endeavour not to entertain their faults any longer. (Dhyana Vahini, Ch 14)
As soon as you find amoral intentions surfacing in the mind, contemplate on God to nullify their effect. - BABA
கோபத்தைப் பொறுத்தவரை, ஆன்மிக சாதகர்கள் தங்களைத் தூண்டிவிடக்கூடிய மிகச்சிறிய விஷயங்களில் கூட விழிப்புடன் இருக்க வேண்டும்; ஏனெனில் அதில் கவனக்குறைவாக இருந்தால், அவர்களால் சிறிதளவு கூட முன்னேற முடியாது. அத்தகையவர்கள் இனிமையான ப்ரேம பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது கெட்ட குணங்கள் மறைந்துவிடும். சில சாதகர்கள், தங்களிடம் உள்ள கெட்ட குணங்களை யாராவது கண்டறிந்து அவர்களுக்குச் சுட்டிக்காட்டினால் மிகுந்த கோபம் கொள்கின்றனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கி விடுகிறது! ஆன்மிக சாதகர்கள் எப்போதும் அகத்தை நோக்கிய பார்வை கொண்டவர்களாக இருக்க வேண்டும்; அவர்கள் மனதை வெளிப்புறமாக அலைய அனுமதித்தால், அவர்களால் தங்கள் தவறுகளைக் கண்டறிய முடியாது. தற்பெருமை அகப்பார்வையைத் தடுத்து, மனதை ஆராய்வதில் குழப்பத்தை உண்டாக்குகிறது. சாதகர்கள் வெற்றியை அடைய விரும்பினால், அவர்கள் தங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்களுக்குத் தலைவணங்க வேண்டும். அதுவே தியானத்தின் பாதையில் விரைவாக முன்னேறும் வழியாகும். மேலும், இனி தவறுகளை ஒருபோதும் இழைக்காமல் இருக்க அவர்கள் முயன்றிட வேண்டும். (தியான வாஹினி, அத்தியாயம்-14)
உங்கள் மனதில் நெறியற்ற நோக்கங்கள் எழுவதை அறிந்தவுடனேயே இறைவனைப் பற்றி சிந்தித்து அவற்றின் பாதிப்பை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுங்கள். - பாபா