azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 22 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 22 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Aspirants must never entertain hatred against those who point out their defects, for that is as bad as hating the ‘good’. The good has to be loved and the bad discarded. Remember, the bad should not be hated. It has to be given up, avoided. Only people who can do this can achieve progress in meditation and spiritual wisdom. Conceit, jealousy, the passionate (rajasic) exhibition of one’s superiority, anger, the craving to inform oneself of the weakness of others and their failings, trickery — all these are obstacles in the path of meditation. Even if these are not patently exhibited, the inner impulses urging one along these wrong directions are latent in the mind. A room which has been kept closed for a long time and has become dust-ridden and foul-smelling, needs to be opened, cleaned, and made habitable by elaborate sweeping and dusting. In the same manner, the mind too has to be cleaned by meditation. (Dhyana Vahini, Ch 14)
We must not give scope to bad feelings but constantly strengthen pure intentions to the extent possible. This is true sadhana. - BABA
ஆன்மிக சாதகர்கள் தங்கள் குறைகளைச் சுட்டிக்காட்டுபவர்களின் மீது ஒருபோதும் வெறுப்பு கொள்ளக் கூடாது; ஏனென்றால் அது 'நல்லதை' வெறுப்பது போல ஆகிவிடும். நல்லதை விரும்பி, கெட்டதை நிராகரிக்க வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், கெட்டதை வெறுக்கக்கூடாது. அதை விட்டுவிட வேண்டும், தவிர்க்க வேண்டும். இதைச் செய்யக்கூடியவர்கள் மட்டுமே தியானம் மற்றும் ஆன்மிக ஞானத்தில் முன்னேற்றம் அடைய முடியும். ஆணவம், பொறாமை, தானே உயர்ந்தவன் எனக் காட்டிக்கொள்ளும் ராஜஸ சுபாவம், கோபம், மற்றவர்களின் பலவீனம் மற்றும் தோல்விகளைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஆர்வம், கபடம் ஆகிய அனைத்தும் தியானத்தின் பாதையில் தடைகளாகும். இவை வெளிப்படையாகக் காணப்படாவிட்டாலும், தவறான வழிகளில் ஒருவரைத் தூண்டும் அக உந்துதல்கள் மனதில் மறைந்திருக்கும். நீண்ட நாட்களாக மூடி வைக்கப்பட்டு, கவனிப்பாரற்று துர்நாற்றம் வீசும் அறையைத் தங்குவதற்கு ஏற்ப தயார் செய்ய வேண்டுமென்றால், அதைத் திறந்து, சுத்தம் செய்து, நன்றாகப் பெருக்கித் துடைக்க வேண்டி இருக்கும். அதைப் போலவே, மனதையும் தியானத்தின் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். (தியான வாஹினி, அத்தியாயம்-14)
மோசமான உணர்வுகளுக்கு நாம் இடமளிக்கக் கூடாது; ஆனால் இயன்ற அளவு தூய்மையான நோக்கங்களை இடையறாது வலுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். இதுவே உண்மையான ஆன்மிக சாதனையாகும். - பாபா