azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 19 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 19 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Love is the seed, courage is the blossom and peace is the fruit, that the sages grew in the garden of their hearts. They toiled for identifying themselves with the Truth, not for painting falsehood with the authenticity of Truth and parading as if they accomplished the mission on which they had come to earth. They achieved such success that Bharat, for centuries, was the Preceptor of Humanity, but now the Preceptor has started taking lessons from the least intelligent of the pupils and rearing the head in pride when the pupil congratulates him! Churn the sacred texts and text books on Yoga and religion and collect the nutritious butter for gifting it to the world. The best prescription for living in undiminished Ananda (bliss) is to develop genuine sincerity, and speak what you think, and act what you speak. For a thousand who speak and praise, perhaps one puts this prescription into daily use. A bunch of horses start from the crease for the race, but only one or two are acclaimed as winners! (Divine Discourse, June 01, 1970)
The close inter-relationship between sathya and dharma is the cardinal feature of Bharatiya culture. - Baba
ப்ரேமையையே விதையாகவும், தைரியத்தையே மலராகவும், சாந்தியையே கனியாகவும், முனிவர்கள் தங்களுடைய இதயமெனும் தோட்டத்தில் வளர்த்தனர். பேருண்மையை அறிந்துணர்வதற்காக அரும்பாடுபட்டார்களே தவிர, அசத்தியத்தின் மீது சத்தியத்தின் சாயம் பூசி, தாங்கள் இந்த உலகில் பிறவி எடுத்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டதைப் போன்று பறைசாற்றிக் கொள்வதற்காக அல்ல. அவர்கள் பெற்ற வெற்றியினால் பல நூற்றாண்டுகளுக்கு மனிதகுலத்திற்கே பாரதம் ஆசானாகத் திகழ்ந்தது; ஆனால் இன்றோ, அந்த ஆசானே, மாணவர்களுள் அறிவு குறைந்தவனிடம் பாடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்து, அந்த மாணவன் பாராட்டும்போது பெருமிதத்தால் தலைநிமிர்ந்து நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது! வேத சாஸ்திரங்களையும், யோகா மற்றும் மத கிரந்தங்களையும் கடைந்து, சத்தான வெண்ணையைத் திரட்டி உலகிற்குப் பரிசாக அளியுங்கள். உண்மையான நேர்மையை வளர்த்துக்கொள்வதும், நீங்கள் சிந்திப்பதைச் சொல்வதும், சொல்வதைச் செய்வதும் தான் அள்ளஅள்ளக் குறையாத ஆனந்தத்தில் வாழ்வதற்கான மிகச்சிறந்த அறிவுரையாகும். பேசிப் புகழும் ஓராயிரம் பேர்களில் ஒருவர் தான் இந்த அறிவுரையை அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறார் எனலாம். அதாவது, பந்தயக் கோட்டிலிருந்து கிளம்பும் பல குதிரைகளுள் ஒன்றோ அல்லது இரண்டோ தான் பந்தயத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகின்றன, அல்லவா? (தெய்வீக சொற்பொழிவு, ஜூன் 01, 1970)
சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் இடையே உள்ள நெருங்கிய சம்பந்தமே, பாரத கலாச்சாரத்தின் முக்கியமான அம்சமாகும். - பாபா