azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 18 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 18 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind that does not know God is a dry leaf, rising with every gust of wind, and falling when it subsides. But, the mind fixed in the awareness of God is like a rock, unaffected by doubt, stable and secure. God, as amenable to worship and contemplation, is referred to as Hiranyagarbha - Golden Womb, the Origin of Creation, the Immanent Principle that has willed to become manifest and multiply. The term gold is appropriate, for gold is the metal from which multifarious jewels are shaped by craftsmen, to suit the needs, fancy, foibles and fashions of its wearers. God too is shaped by human imagination, inclination and intellect into various forms, grand or grotesque, frightening or charming. Man erects these images, and pours out before them, his fears, fancies, desires, dreads and dreams. He accepts them as masters, comrades, monarchs, teachers, as the moment dictates. But whatever man may do with God, God is unaffected. He is Gold, which subsists in and through all the jewels. (Divine Discourse, Oct 21, 1969)
However great a person may be, it is not possible for one to say that God is like this or like that. - Baba
இறைவனை அறியாத மனம், காற்று பலமாக வீசும்போது மேலே பறந்து, குறையும்போது கீழே விழும் காய்ந்த சருகு போன்றதாகும். ஆனால் இறையுணர்வில் நிலைகொண்டிருக்கும் மனம், பாறையைப் போன்று சந்தேகத்தால் பாதிக்கப்படாமல், உறுதியாக, பாதுகாப்பாக இருக்கும். வழிபாட்டிற்கும், தியானத்திற்கும் இணங்கத்தக்கவனாக இறைவன் இருப்பதால், அவன் ஹிரண்யகர்ப்பன் எனப்படுகிறான்; அதாவது தங்கக்கருவறை, படைப்பின் தோற்றுவாய், எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் வெளிப்பட்டு பன்மடங்காக வேண்டும் என்று சங்கல்பித்த தத்துவம் என்பதாகும். தங்கம் என்று குறிப்பிடப்படுவது மிகவும் பொருத்தமானதே; ஏனெனில் தங்கம் என்பது, அணிந்துகொள்பவர்களின் தேவைகள், கற்பனைகள், ரசனைகள் மற்றும் நாகரீகத்திற்கு ஏற்றவாறு பலதரப்பட்ட கண்கவர் அணிகலன்களாக கைவினைஞர்களால் வடிவமைக்கத்தக்க உலோகமாகும். அதைப்போன்றே, இறைவனும் கூட மனிதனின் கற்பனை, விருப்பம், அறிவு ஆகியவற்றுக்கு ஏற்ப பிரம்மாண்டமான அல்லது கோரமான, பயங்கரமான அல்லது வசீகரமான பல்வேறு ரூபங்களில் வடிவமைக்கப்படுகிறான். மனிதன் இந்த வடிவங்களை ஸ்தாபித்து, அவற்றின் முன் தன்னுடைய அச்சங்கள், கற்பனைகள், ஆசைகள், கலக்கங்கள் மற்றும் கனவுகளைக் கொட்டித் தீர்க்கிறான். அந்தந்த தருணத்திற்கு ஏற்ப மனிதன் அவற்றை நாயகனாக, நண்பனாக, அரசனாக, ஆசானாக ஏற்றுக்கொள்கிறான். ஆனால், மனிதன் இறைவனுடன் இப்படி என்ன செய்தாலும், இறைவன் அதனால் பாதிக்கப்படுவதில்லை. எல்லா ஆபரணங்களிலும் உறைகின்ற தங்கத்தைப் போன்றவனே இறைவன் ஆவான். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 21, 19)
ஒருவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இறைவன் இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று அவரால் சொல்ல இயலாது. - பாபா