azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 14 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 14 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

He is in you! It is He that prompted you to project Him into the outer world, as this idol or that image, to listen to your outpouring and give you peace! Without the inspiration, solace, and joy that He confers from within, you will be raving mad, as one who has lost his moorings and is tossed about, rudderless, on a stormy sea. Hold on to Him in the heart, hear Him whisper silent words of counsel and consolation. Converse with Him, guide your footsteps as He directs, and you reach the goal, safe and soon! The picture before which you sit, the flowers which you place on it, the hymns you recite, vows you impose on yourselves, vigils you go through - these are activities that cleanse and remove obstacles in the way of your getting aware of the God within. Really speaking, you are He; not this body which you are carrying with you, like the snail, loaded with its own house, the shell! When the fascination for the body goes, the Light of the God within will shine and illumine your thoughts, words and deeds. (Divine Discourse, Oct 21, 1969)
All work is God’s; He inspires, He helps, He executes, He enjoys, and He is pleased. - Baba
இறைவன் உங்களுள்ளேயே தான் இருக்கிறான்! அவனை சிலையாகவோ, படமாகவோ வைத்து, நீங்கள் மனவேதனைகளைக் கொட்டுவதை செவிமடுத்து, உங்களுக்கு அமைதியை நல்கும் இறைவனாக வெளியுலகிற்கு வெளிப்படுத்துமாறு உங்களைத் தூண்டியதும் அவனே! உள்ளிருந்து அவன் அளிக்கும் உத்வேகம், ஆறுதல், மகிழ்ச்சி ஆகியவை இல்லையென்றால் ஆர்ப்பரிக்கும் கடலில், படகின் நங்கூரத்தையும் திசைதிருப்பு கட்டையையும் இழந்து, மேலும் கீழுமாகத் தூக்கி எறியப்பட்டு, திக்குத்தெரியாமல் தத்தளிக்கும் ஒருவனைப் போல பித்துப்பிடித்துப் பிதற்ற நேரிடும். அவனை இதயத்தில் இறுகப்பிடித்துக் கொண்டு, அவன் அமைதியாகக் கூறும் அறிவுரைகள் மற்றும் ஆறுதல் வார்த்தைகளைக் கேளுங்கள். அவனுடன் உரையாடுங்கள், அவனது வழிகாட்டுதலின்படி நடந்திடுங்கள், பின்னர் நீங்கள் குறிக்கோளை பத்திரமாகவும், விரைவாகவும் அடைவீர்கள்! வழிபடுவதற்கு உங்கள் முன் வைத்திருக்கப்படும் படம், அதற்கு நீங்கள் சாத்தும் மலர்கள், சொல்லும் மந்திரங்கள், மேற்கொள்ளும் விரதங்கள், இரவு கண்விழித்து செய்யப்படும் உபாசனைகள் - இவையாவும் உங்களுள் உறையும் இறைவனை உணர்வதற்கான வழியில் இருக்கும் தடைகளை நீக்கித் தூய்மைப்படுத்தும் செயல்பாடுகளே. உண்மையைச் சொன்னால், நீங்கள் இறைவனே அன்றி, தன் சொந்த வீடாகிய ஓட்டை சுமந்து செல்லும் நத்தையைப் போல, நீங்கள் சுமந்து கொண்டு செல்லும் இந்த உடல் அல்ல! உடல் மீதான ஈர்ப்பு மறையும்போது, அகத்தில் உள்ள தெய்வீக ஜோதி, உங்களுடைய சிந்தனைகள், சொற்கள், செயல்கள் ஆகியவற்றை ஒளிரச்செய்யும். (தெய்வீக அருளுரை, அக்டோபர் 21, 1969)
அனைத்துப் பணிகளும் இறைவனுடையதே; உத்வேகமளிப்பவனும் அவனே, உதவுபவனும் அவனே, செயல்படுத்துபவனும் அவனே, சிந்தை மகிழ்பவனும் அவனே, ஆனந்தப்படுபவனும் அவனே. - பாபா