azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 06 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 06 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

In each person’s life, Ramayana is happening: Rama is the son of Dasaratha — One with ten chariots! What do you think are these ten chariots? They are the senses: the five sense organs of action and five organs of perception. Truth (Satya), righteousness (dharma), peace (shanti), and love (prema) are the four sons — Rama is truth, Bharata is righteousness, Lakshmana is love, and Shatrughna is peace. Take as your ideals these great characters depicted in the Ramayana. You will see how your life will be filled with peace and joy if only you dwell on these ideals. Ramayana is to be experienced in the heart, not investigated as a mental phenomenon. As you go on reading and ruminating, the inner meaning will flash on you when the mind is cleansed by the elevating ideas therein. Do not exaggerate the importance of things that have but material utility; they fade even while you grasp them by the hand. (Divine Discourse, Apr 25, 1961)
The story of Rama is sacred, ideal, nectarous and blissful. Love Rama, and through Love, realise Him. - Baba
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ராமாயணம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது: பத்து ரதங்களைக் கொண்டவராகிய தசரதரின் புதல்வர் ராமர் ஆவார். இந்த பத்து ரதங்கள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவை ஐந்து ஞானேந்திரியங்களும், ஐந்து கர்மேந்திரியங்களும் ஆகும். சத்தியம், தர்மம், சாந்தி, ப்ரேமை ஆகியவையே நான்கு புதல்வர்கள்; அதாவது ராமரே சத்தியம், பரதனே தர்மம், லக்ஷ்மணனே ப்ரேமை, சத்ருக்னனே சாந்தி. ராமாயணத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள இந்த தலைசிறந்த பாத்திரங்களை உங்களுடைய இலட்சியங்களாக எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இலட்சியங்களோடு மட்டும் நீங்கள் வாழ்க்கை நடத்துவீர்களேயானால், உங்களுடைய வாழ்க்கை எவ்வாறு சாந்தி சந்தோஷங்களால் நிறைகிறது என்பதைக் காண்பீர்கள். ராமாயணத்தை இதயத்தில் அனுபவித்துணர வேண்டுமே தவிர மனதால் ஆராய்வதற்கு அல்ல. நீங்கள் அதைப் படித்து, ஆழ்ந்து சிந்தித்துக்கொண்டே செல்கையில், அதில் உள்ள உயரிய கருத்துக்களால் மனம் தூய்மையடையும் போது, அதன் உட்பொருள் பளிச்சென்று உங்களுக்குத் தெளிவாகும். அதிலுள்ள உலகியலான பயன் மட்டுமே கொண்ட பொருட்களின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்தாதீர்கள்; நீங்கள் அவற்றை இறுகப் பற்ற முனையும் போதே பிடிக்குள் சிக்காமல் மறைந்துவிடும். (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 26, 1961)
ராமகாதை புனிதமானது, மேன்மையானது, அமிர்தமயமானது, ஆனந்தமயமானது. ராமரை நேசித்து, ப்ரேமையின் மூலம் அவரை உணருங்கள். - பாபா