azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 02 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 02 Sep 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

To grasp the full significance of all-pervasive Omkara, it is necessary to have self-control to bring the sensory organs under control. In reciting any mantra, the primacy to be accorded to Om should be recognised. In the mantras, Keshavaya namah, Govindaya namah, Narayanaya namah, the significance of ‘Namah’ which occurs at the end should be noted. The worshipful attitude signified by Namah (salutations) will be lost if Om is not used at the beginning of each mantra. It is only when ‘Om’ is said at the beginning and Namah at the end, that the full purport of the mantra will be brought out. The integral connection between Om and namah should be recognised! Namah represents Prakriti (objective world). Om connotes Purusha (Divinity). The purpose of the mantra is to reveal the connection between Prakrithi and Purusha! (Divine Discourse, Oct 01, 1984)
It is only when the inner meanings of various aspects relating to the Divine are understood that worship can be offered to the Divine meaningfully. - Baba
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஓம்காரத்தின் முழுமையான முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள, புலன்களைக் கட்டுக்குள் கொண்டு வரும் சுயக்கட்டுப்பாடு அவசியம். எந்த மந்திரத்தை உச்சரித்தாலும் ஓம்காரத்திற்கு கொடுக்கப்பட வேண்டிய பிரதான ஸ்தானத்தை உணர வேண்டும். கேசவாய நமஹ, கோவிந்தாய நமஹ, நாராயணாய நமஹ ஆகிய மந்திரங்களில், முடிவில் வரும் 'நமஹ' என்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பாகக் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு மந்திரத்தின் தொடக்கத்திலும் ‘ஓம்’ பயன்படுத்தப்படாவிட்டால், நமஹ - வணங்குகிறேன் என்பதைக் குறிக்கும் வழிபாட்டு மனப்பான்மை இல்லாமல் போய்விடும். தொடக்கத்தில் ‘ஓம்’ என்றும், இறுதியில் நமஹ என்றும் கூறினால்தான் மந்திரத்தின் முழு சாராம்சமும் வெளிப்படும். ஓம் மற்றும் நமஹ இடையே உள்ள ஒருங்கிணைந்த தொடர்பை உணர வேண்டும்! நமஹ என்பது பிரக்ருதி, அதாவது பொருட்களாலான உலகத்தைக் குறிக்கிறது. ஓம் என்பது புருஷன், அதாவது இறைவனைக் குறிக்கிறது. மந்திரத்தின் நோக்கம், பிரக்ருதிக்கும் புருஷனுக்கும் உள்ள தொடர்பை வெளிப்படுத்துவதே! (தெய்வீக அருளுரை, அக்டோபர் 01, 1984)
இறைவனுடைய பல்வேறு அம்சங்களின் உள்ளார்ந்த பொருளை உணர்ந்த பிறகுதான், இறைவனுக்கு செய்யப்படும் ஆராதனை அர்த்தமுள்ளதாக இருக்க முடியும். - பாபா