azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The significance of Vinayak Chaturthi is explained in different ways. Is it possible to transplant an elephant's head on a human body? The esoteric significance of the image of Ganesha is: He has been given the head of an elephant because He is known for His extraordinary intelligence. The elephant is symbolic of extreme intelligence. In common parlance, an intelligent person is described as having gaja telivi (or the elephant's intelligence). Ganapati is described as "Buddhi Vinayaka" and "Siddhi Vinayaka" (Vinayaka, the Wise and the Accomplished). There is thus an inner significance for every name and form. Normally an elephant's head on a human body should present an ugly image. But anyone can see that Ganesa's elephant head has an attraction of its own. It is symbolic of extraordinary intelligence and intellectual ability. (Divine Discourse, Sep 15, 1988)
The person devoted to God knows no failure. The name of the Lord, if taken sincerely, overcomes all obstacles. - Baba
விநாயக சதுர்த்தியின் முக்கியத்துவம் பல்வேறு விதமாக விளக்கப்படுகிறது. ஒரு யானையின் தலையை மனித உடலில் பொருத்த முடியுமா? ஆம், கணேசருடைய திருவடிவின் ஆழ்ந்த உட்கருத்து யாதெனில், அசாதாரணமான அறிவாற்றல் படைத்தவர் விநாயகர் என்பதால் அவருக்கு யானைமுகம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதாகும். யானை அதீதமான அறிவாற்றலின் அடையாளம். பொதுவாக பேச்சுவழக்கில், ஒரு புத்திசாலி நபர் ‘கஜ-தெலிவி’ அதாவது யானையைப் போன்று அறிவுக்கூர்மை கொண்டவர் என்று வர்ணிக்கப்படுகிறார். கணபதி, “புத்தி விநாயகர்” மற்றும் “சித்தி விநாயகர்” என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு ஒவ்வொரு நாம ரூபத்திற்கும் ஓர் உள்ளார்ந்த பொருள் இருக்கிறது. சாதாரணமாக, யானை முகம் கொண்ட மனித உடல் பார்ப்பதற்கு அழகற்றதாக தோற்றமளிக்க வேண்டும். ஆனால் கணேசரின் வேழமுகத்தை யார் பார்த்தாலும் அதற்கே உரிய ஈர்ப்புடன் விளங்குவதைக் காண முடியும். இது அசாதாரண அறிவாற்றல் மற்றும் அறிவுசார் திறனின் அடையாளமாகும். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 15, 1988)
இறைவனிடம் பக்தி உடையவனுக்கு தோல்வி என்பதே இல்லை. இறைவனுடைய திருநாமம், சிரத்தையுடன் உச்சரிக்கப்பட்டால், அனைத்து தடைகளையும் நீக்கிவிடுகிறது. - பாபா