azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 24 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 24 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

While doing meditation, the mind shouldn’t be allowed to wander away from the target. Whenever it flies off at a tangent, it must be led back to the form meditated upon. Finally, if you so desire, all things can be subsumed in that form itself! Nevertheless, only one form must be meditated upon in the beginning. You shouldn’t change daily from one to another. Again, during spiritual practice, you should not indulge in thoughts about things you don’t like which cause pain or shake your faith. If any such peep in, learn gradually to welcome them as beneficial and seek to grasp the good in them, instead of the bad. Of course, the mind is inert (jada). Just as when water, inert matter, begins to shine when it’s placed in the Sun, the inert mind borrows effulgence from the Atma and appears as if it has consciousness (Chaitanya). Intellect (buddhi) gets reflected in the mind, so it looks as if the mind is also intelligent, that is all. The mind’s real nature is ignorance. (Dhyana Vahini, Ch 13)
Adopt repetition of the name and meditation to overcome your own sorrow, and to plunge in the cool waves of the sea of the grace of the Lord. - Baba
தியானம் செய்யும்போது, மனம் தனது குறிக்கோளிலிருந்து விலகி சுற்றித் திரிவதற்கு அனுமதிக்கக் கூடாது. அது எங்கு பறந்து சென்றாலும், நீங்கள் தியானிக்கும் ரூபத்தின் மீது அதைத் திரும்பக் கொண்டு வர வேண்டும். பின்னர் வேண்டுமென்றால், பலவிதமான பொருட்களை தியானித்தாலும், இந்த ரூபத்தையே தான் இறுதியாக சேரும். இருந்தபோதிலும், ஆரம்பத்தில் ஒரே ஒரு ரூபத்தைத்தான் தியானிக்க வேண்டும். நீங்கள் தினமும் ஒரு ரூபத்தைத் தியானிப்பதோ, பிறகு மாற்றுவதோ கூடாது. மேலும், தியானம் செய்யும்போது, உங்களுக்குப் பிடிக்காத, உங்களைத் துன்புறுத்தும், உங்களுடைய நம்பிக்கையைக் குலைக்கும் விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளில் நீங்கள் ஈடுபடக்கூடாது. ஒருவேளை இவை தலைதூக்குமேயானால், படிப்படியாக அவற்றை நன்மை பயப்பவை என்று ஏற்றுக் கொண்டு, அவற்றிலிருக்கும் தீயவற்றை விடுத்து நல்லவற்றை கிரஹித்துக் கொள்ள வேண்டும். மனம் ஒரு ஜடப்பொருளே. எவ்வாறு ஜடப்பொருளான தண்ணீர் சூரிய ஒளியில் வைக்கப்படும்போது ஒளிர்கிறதோ, அவ்வாறே ஜடமான மனம் ஆத்மாவிலிருந்து ப்ரகாசத்தைப் பெற்றுக்கொண்டு சைதன்யமாக அதாவது மெய்யுணர்வாக தோற்றமளிக்கிறது. புத்தியும் மனதில் பிரதிபலிப்பதால், மனமும் கூட அறிவாற்றல் படைத்ததைப் போல் தோற்றமளிக்கிறது, அவ்வளவுதான். ஆனால் மனதின் உண்மையான இயல்பு அஞ்ஞானமே. (தியான வாஹினி, அத்தியாயம்-13)
உங்களுடைய துக்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு ஜப தியானங்களை செய்யத் தொடங்குங்கள்; சர்வேஸ்வரனின் சந்தோஷ சாகரத்தில் மூழ்குங்கள். - பாபா