azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 20 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 20 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

‘Krish’ means to attract, draw, as in akarshana. Krishna draws the mind away from sensory desires; that is a way in which the draw operates. He pulls the mind towards Him and so they are pulled away from everything else, for everything else is inferior, less valuable. He satisfies the deepest thirst of man, for peace, joy and wisdom. That is why He is Megha-Shyama, dark-blue as the rain cloud. The very sight of the rain-laden cloud is so refreshing. He is lotus-eyed, lotus-palmed, lotus-soled; the lotus is reminiscent of cool, calm, deep lakes of limpid water, water that quenches thirst. When Krishna-trishna (thirst for Krishna) is quenched, highest bliss is attained; there’s no more need, no more want, defect or decline. The urge to drink inferior drinks, that only feeds the thirst, disappears when once the sweetness of Krishna Nama and Krishna bhava (name and thoughts of Krishna) are tasted. (Sathya Sai Speaks, Vol 6, Ch 24)
Attachment to sense objects makes an act low; attachment to God makes it sacrosanct. - BABA
ஆகர்ஷணம் என்ற பதத்தில் இருப்பது போல், ‘கிருஷ்’ என்றால், ஈர்ப்பது, தன்பால் இழுப்பது என்று பொருள். கிருஷ்ணர், புலன் ஆசைகளிலிருந்து மனதை விலக்கி ஈர்த்துக் கொள்கிறார்; அந்த ஈர்ப்பு செயல்படும் விதம் அப்படிப்பட்டதே. அவர் மனதை தன்பால் ஈர்த்துக் கொள்கிறார், அதனால், தரமற்றவை, மலிவானவையாக உள்ள அனைத்திலிருந்தும் மக்கள் விலக்கப்படுகின்றனர். சாந்தி, சந்தோஷம், ஞானம் ஆகியவற்றுக்கான மனிதனின் தீராத தாகத்தை அவர் தணிக்கிறார். ஆகவேதான் அவர் ‘மேகஷ்யாமா’ - கார்மேகம் போன்ற நீலவண்ணம் கொண்டவர் என்று அழைக்கப்படுகிறார். மழைமேகத்தைக் காண்பது புத்துணர்வூட்டக்கூடிய அனுபவம் அல்லவா! அவர் தாமரைக்கண்கள், தாமரை போன்ற உள்ளங்கைகள், தாமரைப்பாதங்கள் உடையவர்; இந்தத் தாமரையானது, குளிர்ந்த, அமைதியான, தெளிந்த நீரைக்கொண்ட ஆழ்ந்த ஏரிகளையும், தாகம் தணிக்கும் குடிநீரையும் நினைவூட்டுகிறது. ‘கிருஷ்ண-த்ரிஷ்ண’ அதாவது கிருஷ்ணருக்கான தாகம் தணிக்கப்படும்போது உயர்ந்த பேரானந்தம் கிட்டுகிறது; இனி, நிறை, குறை, தேவை போன்றவை எதற்கும் இடமில்லை. கிருஷ்ண நாமம் மற்றும் கிருஷ்ண பாவம் ஆகியவற்றின் இனிமையைச் சுவைத்தவுடன், தாகத்தை மட்டுமே தணிக்கும் தரமற்ற பானங்களைக் அருந்த வேண்டும் எனும் உந்துதல் மறைந்து விடும். (ஸ்ரீ சத்ய சாயி அருளமுதம், தொகுதி-6, அத்தியாயம்-24)
புலன் சார்ந்த பொருட்கள் மீதான பற்று ஒரு செயலைக் கீழ்மைப்படுத்துகிறது; இறைவன் மீதான பற்று அதனைப் புனிதமாக்குகிறது. - பாபா