azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 19 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 19 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Krishna is said to have been born in Gokula, grew up in Brindavan, proceeded to Mathura and established His home finally at Dwaraka. The significance of this to the Sadhaka is, "Let Krishna be born in the Gokula of your mind; let Him grow and play prankishly in the Brindavan of your heart; let Him then be fixed in the chitta (memory) of Mathura; and, finally, let Him rule over the agitation-less Consciousness as the Lord and Master of Dwaraka." The nirvikalpa anandam (unwavering bliss) is the final result of His Kingdom established at Dwaraka, in the centre of the waves. Krishna can be born in the mind of man only when three prerequisites are attended to! Make your mind saturated with devotion (bhakti). Make the intellect full of illumination of His glory (jnana deepti), and make the body the instrument for the practice of dharma, of moral virtues (Sat-dharma-acharana). Bhakti is the king; Jnana and Vairagya (wisdom and detachment) are the two aides-de-camp of this monarch. Unaccompanied by these two, the king is not quite secure. (Sathya Sai Speaks, Vol 6, Ch 24)
Krishna appeared in human form to teach mankind to transcend their body consciousness. - BABA
கிருஷ்ணர் கோகுலத்தில் பிறந்து, பிருந்தாவனத்தில் வளர்ந்து, மதுராவுக்குச் சென்று, இறுதியாக துவாரகையில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார் என்று சொல்லப்படுகிறதல்லவா? இதனுடைய தத்துவமானது ஒரு ஆன்மிக சாதகனுக்கு, “கிருஷ்ணர் உங்கள் மனமெனும் கோகுலத்தில் பிறக்கட்டும்; அவர் உங்கள் இதயமெனும் பிருந்தாவனத்தில் வளர்ந்து குறும்புத்தனமாக விளையாடட்டும்; பின்னர் அவர் சித்தமெனும் மதுராவில் நிலைத்திருக்கட்டும்; இறுதியாக அவர், இறைவனாகவும் துவாரகாநாதனாகவும், சலனமற்ற மெய்யுணர்வை ஆட்சி புரியட்டும்" என்பதையே சுட்டிக்காட்டுகிறது. அலைகடலின் நடுவே துவாரகையில் நிறுவப்பட்ட அவரது ராஜ்யத்தின் இறுதி முடிவே "நிர்விகல்ப ஆனந்தம்” எனும் நிலையான ஆனந்தம் ஆகும். மூன்று முன்நிபந்தனைகளுக்கு உட்பட்டால் மட்டுமே கிருஷ்ணர் மனிதனின் மனதில் தோன்ற முடியும்: 1. உங்கள் மனதை பக்திமயமாக ஆக்குங்கள். 2. புத்தியை 'ஞான தீப்தி'யால் அதாவது பகவானுடைய மகிமையின் பிரகாசத்தால் நிறைத்திடுங்கள். 3. உடலை, ‘சத்-தர்ம-ஆசரணம்’ அதாவது தர்மத்தையும், நல்லொழுக்கங்களையும் கடைப்பிடிக்கும் கருவியாக ஆக்குங்கள். பக்தியே அரசன்; ஞானமும், வைராக்கியமும் அரசனின் இரு மெய்க்காப்பாளர்கள். இவ்விருவரும் உடன் இல்லாமல் அரசனுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை. (ஸ்ரீ சத்ய சாயி அருளமுதம், தொகுதி-6, அத்தியாயம்-24)
உடல் மீதான பற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை மனிதகுலத்திற்கு போதிக்கவே கிருஷ்ணர் மானிட உருவில் அவதரித்தார். - பாபா