azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 17 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 17 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The mind plans and executes innumerable deeds and roams over vast expanses, all in the twinkling of an eye! It operates with unimaginable speed. It conceives an object and dallies with it a little, but it soon discards it for another more attractive object toward which it flees and about which it begins to worry! The spiritual aspirant has to be ever watchful of this tendency of the mind. When the mind flirts from object to object, it must be brought back to the right path and the right object. That is the correct spiritual practice, the path of concentration and meditation. If, however, the aspirant does not struggle to achieve this one-pointedness but leaves the mind to itself, following its vagaries from this to that and that to this, the process deserves to be called monkey-meditation (markata dhyana) —a type of meditation that is indeed very harmful to spiritual progress! (Dhyana Vahini, Ch 13)
People who have a wavering mind cannot be true yogis, even though they may pass off as good devotees in external appearances. - Baba
மனம், கண் சிமிட்டும் நேரத்திற்குள் திட்டங்களைத் தீட்டி, எண்ணற்ற செயல்களைப் புரிந்து, எத்தனையோ இடங்களுக்கு சுற்றித் திரிந்துவிட்டு வந்துவிடுகிறது! அது கற்பனைக்கெட்டாத வேகத்தில் செயல்படுகிறது. மனம் ஒரு பொருளின் மீது கவனம் செலுத்தி, அதைப்பற்றி கொஞ்சம் சிந்தித்து காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும்; ஆனால் அதைவிட மிகக் கவர்ச்சியான மற்றொரு பொருள் கிடைத்தவுடன், இதை விட்டுவிட்டு அதற்குத் தாவி, அதைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்துவிடும்! ஆன்மிக சாதகர், மனதின் இத்தகைய போக்கில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். மனம் ஒரு பொருளிலிருந்து மற்றொன்றுக்கு என ஒவ்வொன்றாகத் தாவும்போது, அதனை சரியான வழியில் திருப்பி, சரியான பொருளின் மீது கவனம் செலுத்த வைக்க வேண்டியது அவசியம். அதுவே சரியான ஆன்மிக சாதனையாகும். இதை தாரணை என்றும் தியானம் என்றும் கூறுவர். ஆனால், சாதகர் இந்த ஒருமுனைப்பைப் பெறுவதற்குப் பாடுபடாமல், ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவும் இயல்புடைய மனதை அதன் போக்கில் விட்டுவிட்டால், அது மர்கட-தியானம் அதாவது குரங்கு-தியானம் என்றே அழைக்கத் தகுந்தது. இப்படிப்பட்ட தியானம் ஆன்மிக முன்னேற்றத்திற்கு மிகவும் ஆபத்தானது! (தியான வாஹினி, அத்தியாயம்-13)
வெளிப்பார்வைக்கு நல்ல பக்தர்களைப் போல் தோன்றினாலும், அலைபாயும் மனம் கொண்டவர்கள் உண்மையான யோகிகளாக இருக்க முடியாது. - பாபா