azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 13 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 13 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Whatever you speak shouldn’t cause any disturbance to others. It should be truthful as well as pleasing. You cannot always oblige but you can always speak obligingly. Sacred speech is a manifestation of Divinity. God exists in the form of Shabda Brahmam (sound principle). Divinity is represented in eight forms, Shabda Brahmamayi, Characharamayi, Jyothirmayi, Vangmayi, Nityanandamayi, Paratparamayi, Mayamayi and Shreemayi (God is the embodiment of sound, mobility and immobility, light, speech, eternal bliss, supreme majesty, illusion and wealth). Under any circumstance, don’t allow your speech to be tainted by harshness. Never become agitated. When you understand all are one, there’ll be no chance to get agitated. All bodies are like mirrors, showing you, your own reflection in them. How can you be angry with your own reflection? Speak with love. There is no Divinity greater than love. When you fill your heart with love, your thoughts, vision, words and deeds will be suffused with love! (Divine Discourse, May 07, 2001)
If you do not fill your heart with love, many evil qualities will find their way into it, destroying your very humanness. - Baba
நீங்கள் எது பேசினாலும், அது மற்றவர்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்கக் கூடாது. அது உண்மையானதாகவும் இனிமையானதாகவும் இருக்க வேண்டும். நீங்கள் எப்போதும் உதவமுடியாமல் போகலாம், ஆனால் நீங்கள் இதமாகப் பேசலாமே! புனிதமான பேச்சு தெய்வீகத்தின் வெளிப்பாடாகும். இறைவன், ஒலி தத்துவமெனும் சப்தப்ரம்ம ரூபமானவன். சப்த ப்ரம்மமயி, சராசரமயி, ஜோதிர்மயி, வான்மயி, நித்யானந்தமயி, பராத்பரமயி, மாயாமயி, ஸ்ரீமயி என தெய்வீகம் எட்டுவிதமான ரூபங்களில் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒலி, அசைபவை-அசையாதவை, ஒளி, பேச்சு, நித்திய ஆனந்தம், தலைசிறந்த மாட்சிமை, மாயை, செல்வம் ஆகியவற்றின் திருவுருவமாக இறைவன் வர்ணிக்கப்படுகிறான். எந்த சூழ்நிலையிலும் உங்கள் பேச்சு கடுமையானதாக இருக்க அனுமதிக்காதீர்கள். ஒருபோதும் பதற்றப்படாதீர்கள். அனைவரும் ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொண்டுவிட்டால், பதற்றமடைய வாய்ப்பே இல்லை. அனைத்து உடல்களும் கண்ணாடிகளைப் போன்றவை; அவை உங்கள் பிரதிபிம்பத்தையே காட்டுகின்றன. உங்களுடைய பிரதிபிம்பத்தின் மீதே நீங்கள் எப்படிக் கோபப்பட முடியும்? ப்ரேமையுடன் பேசுங்கள். ப்ரேமையைவிட உயர்ந்த தெய்வம் எதுவுமில்லை. உங்களுடைய இதயத்தை ப்ரேமையால் நிறைத்துக்கொண்டால், உங்களுடைய சிந்தனைகள், பார்வை, சொற்கள் மற்றும் செயல்கள் ப்ரேமமயமாக இருக்கும்! (தெய்வீக அருளுரை, மே 07, 2001)
நீங்கள் உங்கள் இதயத்தை ப்ரேமையால் நிறைக்கவில்லை என்றால் பல தீய குணங்கள் அதற்குள் நுழைந்து உங்களுடைய மனிதத்தன்மையையே அழித்துவிடும். - பாபா