azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Immortality is true nirvana (liberation)! Samyak Drishti (sacred vision) is the first step. Consider all that you see as divine. Let your vision be suffused with love. A vision filled with love is the hallmark of a true human being. All are one, be alike to everyone. You can understand unity in diversity only when you develop a sacred vision. Samyak drishti makes you realise the presence of Divinity in all. The Vedas declare, Ekam Sat Viprah Bahuda Vadanti (Truth is one, but scholars speak of it in many ways). See the world with the vision of truth. All are one; all are essentially divine. Give up multiplicity to attain unity. Vedanta declares that the Atmic principle is the underlying unity in diversity. Bulbs are many but the same current flows in all of them. Likewise, the Atmic principle exists in all. Man’s inability to understand this principle of unity is the cause of his ignorance. True humanness lies in understanding unity in multiplicity. (Divine Discourse, May 07, 2001)
What does unity mean? It is not the combination of many; it is the realisation of oneness. - BABA
அமரத்துவமே உண்மையான நிர்வாணம் - மோக்ஷம் ஆகும்! இதற்கான முதல் படி சம்யக் திருஷ்டி - புனிதமான பார்வை. நீங்கள் பார்க்கும் அனைத்தையும் தெய்வீகமாகக் கருதுங்கள். உங்கள் பார்வை ப்ரேமமயமாக இருக்கட்டும். ப்ரேமை நிறைந்த பார்வையே ஒரு உண்மையான மனிதனின் அடையாளமாகும். அனைவரும் ஒன்றே, அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொள்ளுங்கள். புனிதமான பார்வையை வளர்த்துக் கொள்ளும்போதுதான் உங்களால் வேற்றுமையில் உள்ள ஏகத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். சம்யக் திருஷ்டி, எல்லாவற்றிலும் தெய்வீகம் இருப்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. ஆகவே வேதங்கள், ‘ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி - சத்தியம் ஒன்றே, ஆனால் ஆன்றோர்கள் அதைப் பலவிதமாக விவரிக்கிறார்கள்’ என்று பறைசாற்றுகின்றன. சத்திய திருஷ்டியோடு உலகைக் காணுங்கள். அனைவரும் ஒன்றே; அனைவரும் அடிப்படையில் தெய்வீகமே. ஏகத்துவத்தை அடைய அநேகத்துவத்தைக் கைவிடுங்கள். இதையே வேதாந்தம், அநேகத்துவத்தில் உள்ள ஏகத்துவமே உண்மையான ஆத்ம தத்துவம் என்று கூறுகிறது. மின்விளக்குகள் பலவாக இருக்கலாம், ஆனால் அவை அனைத்திலும் ஒரே மின்சாரம்தான் பாய்கிறது. அதைப் போலவே, அனைத்திலும் உள்ள ஆத்ம தத்துவம் ஒன்றே. இந்த ஏகத்துவத்தை மனிதன் புரிந்து கொள்ள இயலாததே, அவனுடைய அறியாமைக்குக் காரணம். எனவே அநேகத்துவத்தில் ஏகத்துவத்தைப் புரிந்துகொள்வதில்தான் உண்மையான மானவ தத்துவம் இருக்கிறது. (தெய்வீக அருளுரை, மே 07, 2001)
ஏகம் என்றால் என்ன? இது பலவற்றின் கூட்டு அல்ல; இது அனைத்திலும் இருக்கும் ஏகத்துவத்தை உணர்வதே. - பாபா