azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

All hearts are His Property, it is all His Domain. But just as the aristocrat sits only on a clean spot, though the entire area may be his, the Lord will install Himself only if the heart is cleansed. The Lord has said, “Where my devotees sing of Me, there I install Myself, Narada.” I must tell you that you are luckier than men of previous generations. The accumulated merit of many previous births must have granted you this luck. You have got Me, and it is your duty now to develop this relationship that you have achieved by sheer good fortune. Plantains and mangos are kept in straw or dried grass while they are still green. Or at times they are kept in a closed room so that the heat may make them ripe and tasty. Meditation on God gives you too the right temperature to ripen yourselves and become sweet and tasty. (Divine Discourse, Sep 27, 1960)
The heart is the abode of God. We should not allow either animal or demonic qualities to enter into that sacred abode of Divinity. - BABA
அனைத்து இதயங்களும் இறைவனுடைய சொத்தே, அனைத்தும் அவனுடைய சாம்ராஜ்யமே. ஒரு செல்வந்தனுக்கு பரந்த நிலப்பரப்பு முழுவதும் சொந்தமாக இருந்தாலும், சுத்தமான இடத்தில் மட்டுமே அமருவதைப் போல, இதயம் பரிசுத்தமாக இருந்தால் மட்டுமே இறைவன் அதில் குடிகொள்வான். “எங்கெல்லாம் என்னுடைய பக்தர்கள் என் புகழ் பாடுகிறார்களோ, அங்கெல்லாம் நான் இருக்கின்றேன், நாரதா!” என்று பகவான் கூறியுள்ளார். முந்தைய தலைமுறையினரை விட நீங்கள் மிக்க அதிர்ஷ்டசாலிகள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். முற்பிறவிகளில் ஈட்டிய புண்ணியமே உங்களுக்கு இந்த அதிர்ஷ்டத்தை அளித்திருக்க வேண்டும். நீங்கள் ஸ்வாமியைப் பெற்றுள்ளீர்கள், உங்கள் நல்அதிர்ஷ்டத்தால் அடைந்த இந்த உறவை வளர்த்துக்கொள்வது உங்கள் கடமையாகும். வாழைப்பழங்களோ மாம்பழங்களோ காயாக இருக்கும்போது வைக்கோல் அல்லது உலர்ந்த புல்லில் வைக்கப்படுகின்றன. சில நேரங்களில் அவற்றை மூடிய அறையில் வைத்து அங்குள்ள வெப்பத்தினால் அவற்றைப் பழுக்க வைத்து சுவையுள்ளதாக மாற்றலாம். அதைப்போன்று இறைதியானமும், உங்களை நீங்கள் பண்படுத்திக்கொள்வதற்கு ஏற்ற சூழலைக் கொடுத்து, உங்களை இனிமையானவர்களாக செம்மைப்படுத்துகிறது. (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 27, 1960)
இதயம் இறைவனின் உறைவிடம். இறைவனின் புனிதமான அந்த உறைவிடத்திற்குள் மிருக அல்லது அசுர குணங்கள் நுழைய நாம் அனுமதிக்கக் கூடாது. - பாபா