azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 04 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 04 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Ignorance does not exist alone; it has an offspring - ahamkara (ego). That demon has two children - attachment or attraction (raga) and impulse (vasana); that is to say, passion and craving. Passion and craving are closely interrelated. As the passion, so the desire. They are sisters. Through attachment, one gets the feelings of ‘my and mine’; these feelings provoke desire, and desires breed worry. Therefore, to remove ego (ahamkara), attachment and impulse have to be annihilated. That means ignorance has to go, for by that means alone can ego be killed. How to destroy ignorance and develop wisdom (sujnana)? That is the question! The answer is through meditation. The conquest of ignorance, ego, attachment, and impulse brings about liberation (moksha) for the individual (jivi). (Dhyana Vahini, Ch 11)
The one who is a slave to impulses and tendencies (vasanas) is devoid of wisdom. - Baba
அஞ்ஞானம் தனியாக இருப்பதில்லை; அவனுக்கொரு அசுரமகனும் உண்டு, அவனே அகங்காரம். அந்த அசுரனுக்கு இரண்டு குழந்தைகள் - அவர்களே பற்றுதலும் (ராகம்), உந்துதலும் (வாசனை), அதாவது பற்றுதலும் ஆசையும். பற்றுதலும் ஆசையும் ஒன்றுக்கொன்று நெருங்கிய சம்பந்தம் கொண்டவை. பற்றுதல் எவ்வாறோ, ஆசையும் அவ்வாறே. அவை சகோதரிகள் போன்றவை. பற்றுதலின் மூலம் ஒருவர் ‘நான், எனது’ என்ற உணர்வுகளைப் பெறுகிறார்; இந்த உணர்வுகள் ஆசைகளை எழுப்புகின்றன; ஆசைகள் கவலையை உருவாக்குகின்றன. எனவே, அகங்காரத்தை நீக்குவதற்கு, பற்றுதலையும் உந்துதலையும் அழிக்க வேண்டும். அப்படி என்றால் அஞ்ஞானம் தொலைய வேண்டும், ஏனெனில் அந்த வழியில் தான் அகங்காரத்தை அழிக்க முடியும். அஞ்ஞானத்தை அழித்து ஞானத்தை (சுஞ்ஞானம்) எப்படிப் பெறுவது? அதுதான் கேள்வி! இதற்கு விடை, தியானத்தின் மூலமே என்பது தான். அஞ்ஞானம், அகங்காரம், பற்றுதல், உந்துதல் ஆகியவற்றை வெல்வதே மனிதனுக்கு (ஜீவன்) முக்தியை (மோக்ஷம்) அளிக்கிறது. (தியான வாஹினி, அத்தியாயம்-11)
தூண்டுதல்கள், உந்துதல்கள் (வாசனைகள்) ஆகியவற்றுக்கு அடிமையாக இருப்பவன் முற்றிலும் ஞானம் அற்றவன். - பாபா