azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 02 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 02 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You ignore the Divinity you have as the core of your being; at the same time, you seek it in others. That is the tragedy. You insult yourself by feeling helpless, weak, and inferior. Cowardice and self-condemnation — these do not become a spark of the Divine Flame. You can discover your Truth by a little exercise of discrimination. Born in delusion, breathing in delusion, grovelling in delusion, people are unaware of their heritage and feel incapable of attaining it. People are desperate, seeing no means of escape; every effort to achieve peace entangles them further and tighter in the coils of delusion and of restlessness. Like flowers of variegated hue, each redolent with fragrance, people are all basically of the same genus of Brahmam. The fragrance arises from the Divine Essence, which is the real reason for existence. Everyone has to realise that Essence and thus end the series of births and deaths. (Divine Discourse, Dec 02, 1961)
Glory is won, when you discover your Self and revel in its Divinity. - BABA
உங்களுடைய உட்கருவாக இருக்கும் தெய்வீகத்தை நீங்கள் புறக்கணிக்கிறீர்கள்; அதே நேரத்தில், நீங்கள் அதை மற்றவர்களிடம் தேடுகிறீர்கள். அதுதான் பரிதாபத்திற்குரியது. உதவியற்றவராகவும், பலவீனமாகவும், தாழ்வாகவும் உணருவதன் மூலம் உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள். கோழைத்தனம் மற்றும் சுய-கண்டனம் - இவ்விரண்டும் அருட்ஜோதியின் ஒளிக்கதிராக ஆக முடியாது. சற்று பகுத்தறிவதன் மூலம் உங்களுடைய மெய்நிலையை நீங்கள் கண்டறியலாம். மாயையில் பிறந்து, மாயையில் வாழ்ந்து, மாயையில் உழல்வதால், மக்கள் தங்கள் பாரம்பரியத்தை அறியாமல், அதை அடைய முடியாதென்று எண்ணுகின்றனர். தப்பிப்பதற்கு வழியேதுமின்றி மக்கள் தவிக்கின்றனர்; சாந்தியை அடைவதற்கான ஒவ்வொரு முயற்சியும் அவர்களை மாயை மற்றும் அமைதியின்மையின் வலைகளில் மேன்மேலும் இறுக்கமாக சிக்க வைக்கிறது. பலவண்ண நிறம் கொண்ட சுகந்தம் வீசும் மலர்களைப் போல, மக்கள் அனைவரும் அடிப்படையில் ப்ரம்மத்தை சேர்ந்தவர்களே. வாழ்க்கையின் உண்மையான காரணமான தெய்வீக சாரத்திலிருந்தே சுகந்தம் எழுகிறது. அந்த சாரத்தை ஒவ்வொருவரும் உணர்ந்து அதன்மூலம் பிறப்பு-இறப்பு என்ற தொடருக்கு முடிவுகட்ட வேண்டும். (தெய்வீக அருளுரை, டிசம்பர் 02, 1961)
நீங்கள் மெய்யுணர்வு பெற்று அதன் தெய்வீகத்தில் திளைக்கும்போது, மகத்துவத்தை அடைகிறீர்கள். - பாபா