azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 01 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 01 Aug 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You must have heard the Kalidasa story. He said that he would get liberation, “as soon as I go,” that is to say, as soon as the ego disappears, for then he shines in his native splendour, as Brahman (as the indestructible Atma). The ‘I’, when crossed out, becomes the symbol of the cross; remember, what is crucified is the ego. Then, the divine nature manifests itself unhampered. The ego is most easily destroyed by devotion, by dwelling on the magnificence of the Lord, and by rendering service to others as children of the Lord. You can call on the Lord by any name, for all names are His; select the Name and Form that appeals to you most. That is why 1000 names are composed for the various forms of God; you have the freedom and the right to select any one of the thousand. (Divine Discourse, Mar 25, 1958)
Egoism will be destroyed if you constantly tell yourself, 'It is He, not I', 'He is the force, I am but the instrument.' - BABA
காளிதாசன் கதையை நீங்கள் கேட்டிருப்பீர்கள். “நான்" போன உடன் தனக்கு முக்தி கிடைக்கும் என்று கூறினார், அதாவது அகங்காரம் மறைந்தவுடன், அவர் தனது ஆத்ம ஜோதியில் ப்ரம்மனாக (அழிவற்ற ஆத்மாவாக) பிரகாசிக்கிறார். ‘I’ என்ற ஆங்கில எழுத்தில் குறுக்காக ஒரு கோட்டை வரைந்தால் அதுவே சிலுவையாக ஆகிறது; சிலுவையில் அறையப்படுவது அகங்காரமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிறகு தெய்வீகத் தன்மை தடையேதுமின்றி வெளிப்படுகிறது. பக்தியாலும், இறைவனின் மகத்துவத்தை தியானிப்பதாலும், பிறரை இறைவனின் குழந்தைகளாகக் கருதி சேவை செய்வதாலும், அகங்காரம் மிக எளிதாக அழிக்கப்படுகிறது. நீங்கள் இறைவனை எந்த நாமத்தாலும் அழைக்கலாம், ஏனென்றால் அனைத்து திருநாமங்களும் அவனுடையதே; உங்களுக்குப் பிடித்த நாமரூபத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனால்தான் இறைவனின் பல்வேறு ரூபங்களுக்கு 1000 திருநாமங்கள் சூட்டப்பட்டுள்ளன; ஆயிரத்தில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரமும் உரிமையும் உங்களுக்கு உண்டு. (தெய்வீக அருளுரை, மார்ச் 25, 1958)
'எல்லாம் அவனே, நான் அல்ல', 'இயக்குபவன் அவனே, நான் ஒரு கருவி மட்டுமே' என்று தொடர்ந்து உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொண்டால் அகங்காரம் அழிக்கப்பட்டு விடும். - பாபா