azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 22 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 22 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama and Ravana were equally proficient in 36 forms of knowledge. But sage Valmiki, the composer of the Ramayana, portrayed Ravana as a fool and Rama as a noble one because Ravana misused his knowledge, whereas Rama put his knowledge to proper use. That is why Valmiki described Rama as virtuous and noble. Ravana became the root cause of the death of his sons and brothers because he was unable to control his lust. Today, many people aspire to occupy positions of authority in the political field, though they do not deserve it. But Rama renounced the kingdom itself though, being the eldest son, He richly deserved to be the king. He made such a great sacrifice and went to the forest to uphold his father's word. The Vedas clearly state, “Immortality can be attained only through sacrifice, neither wealth nor progeny nor good deeds can confer it”. In fact, tyaga (sacrifice) is true yoga. If you do not exhale the air that you inhale, your lungs will be affected. If you do not excrete the food you eat, you will have stomach disorders. Likewise, you should give money that you earn in charity with a spirit of sacrifice. There lies the bliss. (Divine Discourse, Mar 12, 1999)
The man who has no spirit of sacrifice can have no peace. - BABA
ராமனும் ராவணனும் 36 கலைகளில் சமமான திறமை பெற்றவர்கள். ஆனால் ராமாயணத்தை இயற்றிய வால்மீகி மஹரிஷி, ராவணனை மூடனாகவும், ராமனை உத்தமனாகவும் சித்தரித்துள்ளார்; ஏனெனில் ராவணன் தன் அறிவை தவறாகப் பயன்படுத்தினான், ஆனால் ராமனோ தன் அறிவை சரியாகப் பயன்படுத்தினான். அதனால்தான் வால்மீகி, ராமனை நல்லொழுக்கமுள்ளவன், உத்தமன் என்று வர்ணித்தார். தனது காமத்தை அடக்க முடியாததால், தன் மகன்கள் மற்றும் சகோதரர்களின் மரணத்திற்கு ராவணன் மூலகாரணமானான். இன்று, பலர் தகுதியற்றவர்களாக இருந்தாலும் கூட, அரசியலில் அதிகாரமிக்க பதவிகளை வகிக்க விரும்புகிறார்கள். ஆனால், மூத்த மகனாகவும், அரசனாவதற்கு எல்லா தகுதியும் இருந்தபோதும் கூட ராமன் ராஜ்யத்தையே துறந்தான். அவன் இப்படிப்பட்ட மகத்தான தியாகத்தைப் புரிந்து, தன் தந்தையின் வாக்கைக் காப்பாற்றுவதற்காக கானகம் சென்றான். "செல்வம், சந்ததியினர், நற்செயல்கள் ஆகியவற்றால் அமரத்துவத்தை அடைய முடியாது; தியாகத்தினால் மட்டுமே அடைய முடியும்" என்று வேதங்கள் தெளிவாகக் கூறுகின்றன. உண்மையில், தியாகமே நிஜமான யோகம். நீங்கள் உள்ளிழுக்கும் காற்றை வெளிவிடாவிட்டால் உங்களுடைய நுரையீரல் பாதிக்கப்படும். உண்ட உணவின் கழிவை நீங்கள் வெளியேற்றாவிட்டால், உங்களுக்கு வயிற்றுக் கோளாறுகள் ஏற்படும். அதேபோல, நீங்கள் சம்பாதித்த பணத்தை தியாக உணர்வுடன் அறவழியில் செலவழிக்க வேண்டும். அதில்தான் ஆனந்தம் இருக்கிறது. (தெய்வீக அருளுரை, மார்ச் 12, 1999)
தியாக உணர்வு இல்லாத மனிதனுக்கு சாந்தி இருக்காது. - பாபா