azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 15 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 15 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Cultivate Eka-bhava (attitude of Oneness) between men of all creeds, all countries and all continents. That is the message of love, I bring. That is the message I wish you to take to heart. Foster love, live in love, spread love - that is the spiritual exercise which will yield the maximum benefit. When you recite the Name of God remembering all the while His majesty, His compassion, His glory, His splendour, and His presence - Love will grow within you, its roots will go deeper and deeper, and its branches will spread wider and wider giving cool shelter to friend and foe, to fellow national and foreigner. God has a million names. Sages and saints have seen Him in a million forms; they have seen Him with eyes closed and eyes open. They have extolled Him in all the languages and dialects of man, but yet, His glory is never exhausted! (Divine Discourse, Jul 04, 1968)
Regard Love as your life-breath and as the sole purpose of your existence. - BABA
எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும், எல்லாக் கண்டங்களிலும் உள்ள மனிதர்களிடையே ஏகபாவத்தை (ஒருமைத்தன்மை உணர்வை) வளர்த்துக் கொள்ளுங்கள். அதுவே நான் அளிக்கும் ப்ரேமையின் அருட்செய்தியாகும். இந்த போதனையை நீங்கள் இதயத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன். ப்ரேமையைப் பேணுங்கள், ப்ரேமையில் வாழுங்கள், ப்ரேமையைப் பரப்புங்கள் - இதுவே அதிகபட்ச பலனைத் தரும் ஆன்மிக சாதனையாகும். இறைவனின் கம்பீரம், கருணை, மகிமை, பிரகாசம், சாந்நித்யம் ஆகியவற்றை எப்போதும் எண்ணி, இறைவனின் திருநாமத்தை நீங்கள் உச்சரிக்கும் போது, ப்ரேமை உங்களுக்குள் வளர்ந்து, அதன் வேர்கள் மேலும் ஆழமாக ஊன்றிச் சென்று, அதன் கிளைகள் பரந்து விரிந்து தன் குளிர்ந்த நிழலை நண்பன்-பகைவன், நம் நாட்டவர்-வெளிநாட்டவர் என அனைவருக்கும் அளிக்கும். இறைவனுக்கு பல்லாயிரக்கணக்கான திருநாமங்கள் உள்ளன. முனிவர்களும் மகான்களும் அவனை பல்லாயிரக்கணக்கான ரூபங்களில் தரிசித்திருக்கிறார்கள்; அவர்கள் அவனை அகத்திலும் புறத்திலும் கண்டு இருக்கிறார்கள். மனிதனின் பேச்சு வழக்கில் உள்ள எல்லா மொழிகளிலும் அவனை போற்றிப் புகழ்ந்திருக்கிறார்கள், இருந்தாலும் அவனுடைய மகிமை ஒருபோதும் குறைந்ததே இல்லை! (தெய்வீக அருளுரை, ஜூலை 04, 1968)
ப்ரேமையை உங்கள் உயிர் மூச்சாகவும், உங்கள் வாழ்க்கையின் ஒரே நோக்கமாகவும் கருதுங்கள். - பாபா