azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 13 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 13 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Guru Poornima is observed today. Guru means Big. Guru also has another meaning: “Gu” means darkness and “Ru” means dispelling. “Guru” means “One who dispels darkness” (the preceptor who dispels the darkness of ignorance). Guru Poornima is the day on which one celebrates the dispersal of the darkness of ignorance from the mind. Hence, people should fill their minds with the all-embracing Love Principle. To experience the fullness of Love, you have to fill your hearts completely with Love. That will be the result of total devotion. But today, devotion is not total. Hence, the benefit also is partial. Part-time devotees cannot expect total reward! The Lord confers full grace on those whose hearts are totally filled with devotion. Spiritual aspirants may follow any one of the nine paths of devotion and realise the Divine. Among these, the attitude of friendship towards God is the one to be cherished because God is the only true and enduring friend for everyone! (Divine Discourse, Jul 22, 1994)
A Guru is one who, through his grace enters your heart, broadens it and enables you to comprehend the aspects of Divinity. - BABA
குருபூர்ணிமா இன்று அனுசரிக்கப்படுகிறது. குரு என்றால் பெரியது. குருவுக்கு இன்னொரு அர்த்தமும் உண்டு: ‘கு’ என்றால் இருள், ‘ரு’ என்றால் அகற்றுவது. ‘குரு’ என்றால் ‘இருளை அகற்றுபவர்’ (அறியாமை எனும் இருளை அகற்றுபவர் குரு). குரு பூர்ணிமா என்பது மனதில் இருந்து அறியாமை இருளைப் போக்குவதைக் கொண்டாடும் நாளாகும். எனவே, மக்கள் தங்கள் மனதை, அனைத்தையும் அரவணைக்கும் ப்ரேம தத்துவத்தால் நிரப்ப வேண்டும். நீங்கள் ப்ரேமையின் பூரணத்துவத்தை அனுபவிக்க, உங்கள் இதயங்களை ப்ரேமையால் முழுவதுமாக நிரப்ப வேண்டும். அதுவே முழுமையான பக்தியின் பலனாகும். ஆனால் இன்று, பக்தி என்பது முழுமையாக இல்லை. எனவே, பலனும் ஓரளவுதான். பகுதி நேர பக்தர்கள் முழு பலனையும் எதிர்பார்க்க முடியாது! எவருடைய இதயங்கள் முழுவதும் பக்தியால் நிரம்பியிருக்கிறதோ, அவர்கள் மீதே இறைவன் தன் அருளை பூரணமாக பொழிகிறான். ஆன்மிக சாதகர்கள், நவவித பக்தியில் எந்தப் பாதையை வேண்டுமானாலும் பின்பற்றி இறைவனை அடையலாம். இவற்றில், இறைவன் உடனான நட்புணர்வே (சக்ய பக்தி) போற்றப்பட வேண்டிய ஒன்று, ஏனென்றால் இறைவன் மட்டுமே அனைவருக்கும் உண்மையான நிலையான நண்பனாவான்! (தெய்வீக அருளுரை, ஜூலை 22, 1994)
குரு என்பவர் தன்னுடைய கருணையால் உங்கள் இதயத்துள் புகுந்து, அதனை விசாலமாக்கி, நீங்கள் தெய்வீகத்தின் அம்சங்களைப் புரிந்து கொள்ள வைப்பவர் ஆவார். - பாபா