azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 11 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 11 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

The greatest disease is the absence of peace. When the mind gets peace, the body also will have health. So, everyone who craves for good health must pay attention to the emotions, feelings, and motives that animate the individual. Just as you give clothes for a wash, you have to wash the mind free from dirt again and again; otherwise, if dirt accumulates and you form a “habit”, it is difficult for the dhobi (person who washes the clothes) to clean as well as harmful to the clothes. It should be a daily process; you should see that no dirt settles upon the mind. That is to say, you should move about in such company that dirt is avoided. Falsehood, injustice, indiscipline, cruelty, hate — these form the dirt. Truth, righteousness, peace, love — these form the clean elements. If you inhale the pure air of the latter, your mind will be free from evil bacteria and you will be mentally sturdy and physically strong. (Divine Discourse, Sep 21, 1960)
A pure heart and firm disposition of the mind are essential to profit from the Gita. - BABA
அமைதியின்மையே மிகக் கொடிய நோயாகும். மனதிற்கு அமைதி கிடைத்தால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, நல்ஆரோக்கியத்தை நாடும் ஒவ்வொருவரும் தங்களை ஆட்டிப்படைக்கும் உணர்வுகள், உணர்ச்சிகள், உந்துதல்கள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டும். துணிகளைத் துவைப்பதற்கு வண்ணானிடம் கொடுப்பதைப் போல, நீங்கள் உங்கள் மனதின் அழுக்கை அடிக்கடி கழுவ வேண்டும்; இல்லையெனில், அழுக்கு சேர்ந்துவிட்டால் அதுவே ஒரு பழக்கமாக மாறிவிடும்; பின்னர் அதை துவைப்பதற்கு வண்ணானுக்கும் கடினம், துணிகளுக்கும் கெடுதல். சுத்தப்படுத்துவது அன்றாட வேலையாக இருக்க வேண்டும்; உங்கள் மனதில் அழுக்கு படியாதவாறு நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, யாருடன் பழகுவதால் அழுக்குகள் தவிர்க்க முடிகிறதோ அத்தகையவரோடு நீங்கள் பழக வேண்டும். பொய்மை, அநீதி, கொடுமை, வன்முறை, த்வேஷம் - இவையே அழுக்குகளை உருவாக்குகின்றன. சத்யம், தர்மம், சாந்தி, ப்ரேமை - இவையே தூய்மையான அம்சங்களாகும்; இவற்றின் தூய காற்றை நீங்கள் சுவாசித்தால், உங்கள் மனம் விஷக்கிருமிகள் இன்றி இருக்கும்; நீங்கள் மன உறுதி படைத்தவராகவும், உடல் வலிமை உடையவராகவும் இருப்பீர்கள். (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 21, 1960)
கீதையினால் பயனடைவதற்கு தூய்மையான இதயமும் உறுதியான மனநிலையும் அத்தியாவசியம் ஆகும். - பாபா