azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 10 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 10 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

When a man emerges from the womb of his mother, he doesn’t find any garland around his neck. There are no jewels made of pearls, nor are there glittering gold ornaments. There are no necklaces studded with precious stones like emeralds and diamonds. But, there is one garland around his neck! Brahma strings together consequences of his past deeds into a heavy garland and puts it around his neck at the time of his birth. Thus, the results of our past actions haunt us. Suppose you eat pakoda in your house; after some time, you will get the belch of pakoda only! Similarly, you get results of your past karmas. Hence, your actions must always be good. In order that one always undertakes good actions, one must cultivate love for God, fear of sin, and morality in society. If one cultivates these three, one will be able to keep away from indulging in bad deeds! Love for God, fear of sin, and morality in society are all interdependent. One follows the other! Repetition of God’s name helps cultivate these noble qualities. (Divine Discourse, Jul 20, 2009)
Whoever does namasmarana (contemplation on God’s name), whatever be the name he takes and wherever he is, his life will be sanctified. - BABA
மனிதன் தன் தாயின் கர்ப்பத்தில் இருந்து வெளிப்படும்போது அவன் கழுத்தில் எந்த மாலையும் காணப்படுவதில்லை. முத்துக்களால் ஆன நகைகளும் இல்லை, மின்னும் தங்க ஆபரணங்களும் இல்லை. மரகதம், வைரம் போன்ற விலையுயர்ந்த ரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாலைகளும் இல்லை. ஆனால் அவனுடைய கழுத்தில் ஒரு மாலை இருக்கிறது! பிரம்மா அவனுடைய முற்பிறவிகளின் வினைகளை ஒரு கனமான மாலையாகக் கோர்த்து, அவன் பிறக்கும்போது அவனுடைய கழுத்தில் போட்டுவிடுகிறார். இப்படித்தான் நம்முடைய முந்தைய வினைகள் நம்மை வாட்டுகின்றன. நீங்கள் உங்கள் வீட்டில் பக்கோடா சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; சிறிது நேரம் கழித்து, உங்களுக்கு பக்கோடாவின் ஏப்பம் தான் வரும்! அதைப்போலவே, உங்களுடைய முற்பிறவிகளின் கர்ம பலன்களை நீங்கள் பெறுகிறீர்கள். எனவே, உங்கள் செயல்கள் எப்போதும் நல்லவையாக இருக்க வேண்டும். ஒருவன் எப்போதும் நற்செயல்களைச் செய்வதற்கு, இறைவனிடம் ப்ரேமை, பாவத்திற்கு அஞ்சுதல், சமூகத்தில் நீதி ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இம்மூன்றையும் வளர்த்துக் கொண்டால், ஒருவர் தீய செயல்களில் ஈடுபடாமல் இருக்க முடியும்! இறைவனிடம் ப்ரேமை, பாவத்திற்கு அஞ்சுதல், சமூகத்தில் நீதி - இவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்திருப்பவை. ஒன்று மற்றொன்றைப் பின்தொடர்கிறது! இறைநாமஸ்மரணை இந்த உன்னத குணங்களை வளர்க்க உதவுகிறது. (தெய்வீக அருளுரை, ஜூலை 20, 2009)
நாமஸ்மரணையை (இறைவனின் நாமத்தை தியானிப்பது) யார் செய்தாலும், அவர் எந்த நாமத்தை எடுத்துக்கொண்டாலும், அவர் எங்கிருந்தாலும் அவருடைய வாழ்க்கை புனிதமாக்கப்படும். - பாபா