azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Even before the advent of Avatar, the stage is set to the minutest detail - Kaikeyi is ready with her two indefinite boons, Dasaratha is ready with the curse of the ascetic on his head entailing upon him a death due to anguish at the separation of his son, and monkeys are ready to help the divine purpose. Sita is ready, risen from earth, to provide cause for the downfall of evil. Just as a garland is made of flowers of many hues and fragrances, gathered from many plants, the Divine Story is made up of a variety of incidents - a boon, a blessing, and a curse to provide the wonderful plot of His Story! Some say Rama shows man how to suffer! Well, if a king arranges a play in the palace and takes delight in enacting the role of the beggar, and acts very realistically, do you declare that he is suffering the miseries of beggary? Rama is bliss. Bliss is Rama. If it’s not sweet, how can it be sugar? If Rama is suffering, He cannot be Rama! (Divine Discourse, Apr 01, 1963)
Meditate on Rama’s form and true nature when you recite or write His name. That will give exercise to the mind, and make it healthy and strong in the spiritual sense. - BABA
அவதாரம் தோன்றுவதற்கு முன்பே, அதற்கான நாடக மேடையின் ஒவ்வொரு அம்சமும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டுவிட்டது - வரையறையற்ற இரண்டு வரங்களுடன் கைகேயி, புத்ர சோகத்தால் மரணமடைய வேண்டும் என்ற முனிவரது சாபத்துடன் தசரதன், தெய்வீகப் பணியில் உதவுவதற்கு வானரங்கள் ஆகியோர் தயாராக இருந்தனர். அன்னை சீதை பூமியிலிருந்து எழுந்தருளி, தீமையின் வீழ்ச்சிக்கான காரணமாக இருப்பதற்கு தயாராக இருந்தாள். பல செடிகளிலிருந்து பறிக்கப்பட்டு, பல்வேறு வண்ணங்களும், வாசனைகளும் நிறைந்த மலர்களால் ஒரு மாலை தொடுக்கப்படுவதை போல, தெய்வீகக் கதை பல்வேறு நிகழ்வுகளால் ஆனது - வரம், ஆசீர்வாதம், சாபம் ஆகியவை சேர்ந்து இறைவனுடைய கதை அமைப்பை அற்புதமாக படைக்கின்றன. மனிதன் எவ்வாறு கஷ்டப்பட வேண்டும் என்பதை ராமர் எடுத்துக்காட்டுகிறார் என்கின்றனர் சிலர்! நல்லது, ஓர் அரசன் அரண்மனையில் நாடகத்தை ஏற்பாடு செய்து, அதில் தானே ஒரு பிச்சைக்காரன் பாத்திரத்தை மகிழ்வுடன் ஏற்று தத்ரூபமாக நடித்தால், பிச்சை எடுக்கும் அவலத்தை அரசன் அனுபவிக்கிறான் என்று சொல்வீர்களா? ராமனே ஆனந்தம், ஆனந்தமே ராமன். இனிப்பாக இல்லை என்றால் அது எப்படி சர்க்கரையாக இருக்க முடியும்? ராமன் கஷ்டப்படுகிறான் என்றால் அவன் ராமனாக இருக்க முடியாது! (தெய்வீக அருளுரை, ஏப்ரல் 01, 1963)
நீங்கள் ராமநாமத்தை உச்சரிக்கும்போதும் எழுதும்போதும், ராமனின் ரூபத்தையும், உண்மையான இயல்பையும் தியானியுங்கள். அது மனதிற்குப் பயிற்சி அளித்து, ஆன்மிக ரீதியில் அதை உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் ஆக்கும்.. - பாபா