azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 08 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 08 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Imagine with what concentration Arjuna heard Gita? His concentration was as steady as that of the cowherd girls who listened to the Message of the Flute in Brindavan. Arjuna forgot the opposing armies, his own hatreds and enthusiasm for war, and became immersed in the teaching he secured. If you develop that one-pointedness in your own particular ‘battlefields’, you can also listen to the Bhagavad Gita or the Sathya Sai Gita, that is intended for you! The Gita was spoken to remove delusion caused by ignorance, and it succeeded in removing it as far as Arjuna was concerned. Others, like Sanjaya and Dhritarashtra, who also heard it did not benefit, because they were still bound by their own particular brand of ignorance. Many read the Gita, but few benefit. You must have Arjuna’s dispassion and Arjuna’s one-pointedness to derive profit from the Gita. A pure heart and a firm disposition of mind are essential. (Divine Discourse, Sep 27, 1960)
The most essential prerequisite for a spiritual seeker is infinite patience and perseverance. - BABA
எப்பேர்ப்பட்ட ஏகாக்ரஹ சித்தத்துடன் அர்ஜுனன் கீதையைக் கேட்டிருப்பான் என்று கற்பனை செய்து பாருங்கள்! பிருந்தாவனத்தின் குழலோசையில் மெய்மறந்துவிட்ட கோபியர்களைப் போலவே அவனுடைய மனக்குவிப்பும் அவ்வளவு நிலையாக இருந்தது. எதிரிப் படைகள், தன்னிடமிருந்த வெறுப்புணர்வுகள், போரின் மீதான ஆர்வம், இவை எல்லாவற்றையும் மறந்து, தான் பெற்ற போதனையில் அர்ஜுனன் ஆழ்ந்துவிட்டான். அவரவர்களுடைய ‘குருக்ஷேத்திரத்தில்’ ஒருமுகமுனைப்பை நீங்கள் வளர்த்துக்கொண்டீர்களானால், உங்களுக்கு உரித்தான பகவத்கீதை அல்லது சத்ய சாயி கீதையை நீங்களும் செவிமடுக்க முடியும்! அஞ்ஞானத்தால் ஏற்பட்ட மாயையை நீக்குவதற்காக கீதை போதிக்கப்பட்டது; அர்ஜுனனிடம் இருந்த மாயையை நீக்குவதில் அது வெற்றியும் கண்டது. சஞ்சயன், திருதராஷ்டிரன் போன்றவர்கள் அவர்களுக்கே உரிய அஞ்ஞானத்தால் கட்டுண்டிருந்ததால், கீதையைக் கேட்ட போதும் கூட அவர்கள் பயனடையவில்லை. பலர் கீதையைப் படிக்கிறார்கள், ஆனால் வெகு சிலரே பயனடைகிறார்கள். கீதையினால் பயன் பெற வேண்டுமானால் அர்ஜுனனிடம் இருந்த நடுநிலை உணர்வும், ஒருமுகமுனைப்பும் உங்களிடம் இருக்க வேண்டும். தூய்மையான இதயமும் உறுதியான மனநிலையும் அத்தியாவசியம். (தெய்வீக அருளுரை, செப் 27, 1960)
எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் ஒரு ஆன்மிக சாதகருக்கு மிக அத்தியாவசியமான முதன்மைத் தேவை ஆகும். - பாபா