azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 07 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 07 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

You attach importance to quantity, but the Lord considers only quality! He doesn’t calculate how many measures of “sweet rice” you offered, but how many sweet words you uttered, and how much sweetness you added in your thoughts! Offer Him the fragrant leaf of devotion, and the flowers of your emotions and impulses freed from pests of lust, anger, etc. Give Him fruits grown in the orchard of your mind, sour or sweet, juicy or dry, bitter or sugary. Once you decide that the orchard in your mind is His, all fruits will be sweet; your attitude of surrender will render all fruits acceptable to the Lord, then how can they be bitter? And, for water, what can be purer and more precious than your tears? Shed them not in grief, mind you, but in rapture at the chance to serve the Lord and to walk along the path that leads to Him! All who aspire to be devotees must eschew attachment and aversion. (Divine Discourse, Feb 08, 1963)
Sweet words and sweet manners lead to sweet actions and sweet reactions. - BABA
நீங்கள் எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள், ஆனால், இறைவன் தரத்தை மட்டுமே பார்க்கிறான்! நீங்கள் எத்தனை படி சர்க்கரைப் பொங்கல் இறைவனுக்கு படைத்தீர்கள் என்று அவன் கணக்கிடுவதில்லை, ஆனால், எத்தனை இனிய வார்த்தைகளைப் பேசினீர்கள், உங்கள் சிந்தனைகளில் எவ்வளவு இனிமையைச் சேர்த்தீர்கள் என்பதையே அவன் பார்க்கிறான். பக்தி எனும் சுகந்த இலையையும், காமம், க்ரோதம் முதலிய விஷப்பூச்சிகள் அற்ற உங்களது உணர்வுகள் மற்றும் உந்துதல்கள் எனும் மலர்களையும் அவனுக்கு அர்ப்பணம் செய்யுங்கள். உங்கள் மனம் எனும் தோட்டத்தில் விளைந்த பழங்களை, அவை புளிப்பாக-இனிப்பாக, ரசமுள்ளதாக -உலர்ந்ததாக, கசப்பாக-தித்திப்பாக, எப்படியிருந்தாலும் அவனுக்கு அளியுங்கள். உங்கள் மனதில் உள்ள தோட்டம் அவனுடையது என்று முடிவெடுத்தவுடனே, அனைத்து பழங்களும் இனிமையாகவே இருக்கும்; உங்களுடைய சரணாகதி மனப்பாங்கே அவற்றை இறைவனுக்கு ஏற்றதாக ஆக்கிவிடும்; பின் எப்படி அவை கசப்பாக இருக்க முடியும்? நீரைப் பொறுத்தவரை, உங்களுடைய கண்ணீரை விட பரிசுத்தமான விலைமதிப்பற்ற ஒன்று இருக்க முடியுமா? துக்கத்தினால் கண்ணீர் சிந்தாமல், இறைவனுக்கு சேவை செய்யவும், அவனை அடைவதற்கான பாதையில் நடப்பதற்கும் வாய்ப்பு கிட்டியதன் பரவசத்தால் கண்ணீர் சிந்துங்கள். பக்தர்களாக இருக்க விழைபவர்கள் அனைவரும் விருப்பு வெறுப்புகளைத் தவிர்க்க வேண்டும். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 08, 1963)
இனிய சொற்கள், நன்னடத்தைகள் - இவ்விரண்டும் நற்செயல்கள், நற்பலன்கள் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும். - பாபா