azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 02 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 02 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Those who never speak of the Lord, or those who are not even aware of Him; who are busy multiplying and strengthening the bonds of worldly existence (samsara); who preach and practise falsehood, injustice, and oppression, and who advise you to stray from the path of dharma — treat those not as your friends but as people to be avoided at all cost. Theirs is the company of wicked people. Associating with such leads to committing wrongs against your will, uttering words that should not be uttered, doing deeds that should not be done, and, consequently, treading the downward road to ruin. People who fear neither sin nor God are capable of venturing into any wickedness; this is no cause for surprise. So, seek the company of those possessed of these two fears; this is true good company. Whether easily available or not, seek and join only good company. (Dhyana Vahini, Ch 09)
To get close to the Divine, you have to engage yourselves in activities which please the Divine. - BABA
இறைவனைப் பற்றி ஒருபோதும் பேசாதவர்கள், அவனைப் பற்றிய எண்ணம் கூட இல்லாதவர்கள், உலகியலான (ஸம்ஸார) பந்தங்களைப் பெருக்கி வலுப்படுத்துவதில் மும்முரமாக இருப்பவர்கள், அசத்தியம், அநியாயம், அடக்குமுறை ஆகியவற்றை போதிப்பதற்கு தர்மத்தின் வழியை விட்டு விலகுமாறு உங்களுக்கு அறிவுறுத்துபவர்கள் - இப்படிப்பட்டவர்களை உங்களுடைய நண்பர்களாக கருதாமல், எப்பாடுபட்டாவது தவிர்க்கப்பட வேண்டியவர்களாகக் கருதுங்கள். அவர்களோடு இருப்பது தீயவர்களின் சகவாசமாகும். இப்படிப்பட்டவர்களோடு சகவாசம் வைத்துக்கொள்வது, உங்களுடைய விருப்பத்திற்கு மாறாக தவறான செயல்களைச் செய்யவும், பேசக்கூடாத வார்த்தைகளைப் பேசவும், செய்யக்கூடாத செயல்களைச் செய்யவும் வைத்து, அதன் விளைவாக அழிவுப் பாதையில் செல்ல நேர்ந்திடும். பாப பீதி இல்லாதவர்கள் எந்தக் கொடுமையையும் செய்ய முற்படுவதில் வல்லவர்கள்; இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. பாப பீதி, தெய்வ ப்ரீதி (பாவம் செய்ய அஞ்சுவது, தெய்வத்தை விரும்புவது) - இவ்விரண்டும் உடையவர்களே சத்சங்கம் என அழைக்கத்தக்கவர்கள். எளிதாகக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், அத்தகைய சத்சங்கத்தையே நாடிச் சேர்ந்திடுங்கள். (தியான வாஹினி, அத்தியாயம்-9)
இறைவனோடு நெருங்கி இருப்பதற்கு, இறைவனுக்குப் பிடித்த செயல்களில் நீங்கள் ஈடுபடவேண்டும். - பாபா