azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 01 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 01 Jul 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

One always seeks happiness by trying to satisfy one’s desires. If a desire is fulfilled, one feels joy, and when it is not, one feels grief. But the trouble is, desire is a bonfire that burns with greater fury, asking for more fuel. One desire leads to ten, and one exhausts oneself in trying to exhaust the demands of desire. One has to be turned back from this path of never-ending desire to the path of inner contentment and joy. One grieves because one has developed attachment toward the unreal. One cultivates an unreasonable affection for wealth, but one is prepared to sacrifice the riches in order to save the lives of one’s children, for attachment to children is stronger than to the wealth that has been earned! One stoops so low as to neglect the children when the choice is between survival and the children’s welfare! But the bliss that one gets when one dwells on the Atma which is the source and spring of all joy, is unbounded and imperishable. That is the real joy. (Divine Discourse, Dec 14, 1958)
The moment man is able to control his desires, all things will come to him of their own accord. - BABA
தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முயற்சிப்பதன் மூலமாகத்தான் சுகத்தை பெற ஒருவர் எப்போதும் விரும்புகிறார். ஆசை நிறைவேறினால் ஒருவர் மகிழ்ச்சியடைகிறார், இல்லையென்றால் வருத்தமடைகிறார். பிரச்சினை என்னவென்றால், ஆசை என்பது தணியாமல் கொழுந்து விட்டெரியும் தீயைப் போன்றதாகும். ஒரு ஆசை, பத்து ஆசைகளுக்கு இட்டுச் செல்கிறது; ஆசையின் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஒருவர் சோர்ந்துவிடுகிறார். முடிவே இல்லாத இந்த ஆசையின் பாதையிலிருந்து, ஒருவரை மனத்திருப்தி மற்றும் ஆனந்தத்தின் பாதையை நோக்கித் திருப்ப வேண்டும். உண்மை அல்லாதவையின் மீது பற்றுதலை வளர்த்துக் கொண்டதால் ஒருவர் துக்கப்படுகிறார். ஒருவர் செல்வத்தின் மீது வரம்புக்கு மீறிய ஆசையை வளர்த்துக் கொள்கிறார்; ஆனால், தனது குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கு, அந்த செல்வத்தைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்; ஏனெனில் குழந்தைகளின் மீதுள்ள பாசம் அவர் ஈட்டிய செல்வத்தின் மீதுள்ள பாசத்தை விட வலிமையானதாக இருப்பதால்! அதே நேரம், தன் வாழ்வா - குழந்தைகளின் நலனா எனும் கேள்வி எழும்போது, தன் குழந்தைகளையே புறக்கணிக்கும் அளவிற்கு ஒருவர் மிகவும் தாழ்ந்துவிடுகிறார்! ஆனால், ஆனந்தத்தின் மூலாதாரமும் ஊற்றுமாகிய ஆத்மாவில் ஒருவர் நிலைகொள்ளும்போது, அவருக்குக் கிடைக்கும் ஆனந்தம் அளவற்றதும், அழிவற்றதும் ஆகும். அதுவே உண்மையான ஆனந்தம். (தெய்வீக அருளுரை, டிசம்பர்14, 1958.)
மனிதன் தன் ஆசைகளைக் கட்டுப்படுத்த முடிந்த அத்தருணமே, அனைத்தும் அவனுக்கு தானாக வந்து சேர்ந்து விடும். - பாபா