azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Jun 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Do not be under the impression that I will be angry with you if you do not accept Me as the Form for meditation! I am not concerned at all; you have perfect freedom to select the Name and Form that gives you the necessary encouragement. When you meditate, the mind often runs after something else, it takes another road. You have then to plug that outlet by means of the Name and Form and see that the even flow of your thoughts towards the Lord is not interrupted; if it happens again, use Name and Form again, quickly. Do not allow the mind to go beyond the twin bunds, this side Name and that side Form! Then it will not stray into a third place. First, when you sit for meditation, recite a few verses on the glory of God, so that the thoughts that are scattered could be collected. Then gradually, while doing the repetition of the Name, draw before the mind’s eye the Form that that Name represents. (Divine Discourse, Feb 23, 1958)
To experience the proximity of the Divine the easiest path is namasmarana, remembering constantly the name of the Lord. – Baba
நீங்கள் தியானம் செய்வதற்கு என் ரூபத்தை ஏற்காவிட்டால் நான் உங்கள் மீது கோபப்படுவேன் என்ற எண்ணத்தில் இருக்காதீர்கள்! எனக்கு அதைப் பற்றி கவலையே இல்லை; உங்களுக்குத் தேவையான ஊக்கத்தை அளிக்கும் திருநாமத்தையும், ரூபத்தையும் தேர்ந்தெடுக்க உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. நீங்கள் தியானம் செய்யும்போது, மனம் அடிக்கடி ஏதோ ஒன்றின் பின் ஓடி வேறு பாதையில் சென்று விடுகிறது. அவ்வாறு மனம் செல்லும் போக்கை நாம ரூபத்தைக் கொண்டு தடுத்து, இறைவனை நோக்கிய உங்கள் எண்ணங்களின் சீரான ஓட்டம் தடைபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்; இவ்வாறு மீண்டும் நடந்தால், நாம ரூபத்தை மறுபடியும் விரைவாகப் பயன்படுத்துங்கள். இந்தப் பக்கம் திருநாமம், அந்தப் பக்கம் ரூபம் என்ற இருகரைகளைக் கடந்து செல்ல மனதை அனுமதிக்காதீர்கள்! பின்னர் அது மூன்றாவது இடத்தில் சுற்றித் திரியாது. நீங்கள் தியானத்திற்கு அமரும் போது, முதலில் இறைவனுடைய மகிமையைப் போற்றி சில ஸ்லோகங்களை சொல்லுங்கள்; அதனால் சிதறியிருக்கும் சிந்தனைகளை ஒன்றுசேர்க்க முடியும். பின்னர் படிப்படியாக, நாமஸ்மரணை செய்யும்போது அந்த நாமத்துக்கு உரிய ரூபத்தை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். (தெய்வீக அருளுரை, பிப்ரவரி 23, 1958)
இறைநாமத்தை இடையறாது நினைவுகூறும் நாமஸ்ரணையே, இறைவனது அருகாமையை அனுபவிப்பதற்கான மிகவும் எளிதான வழியாகும். - பாபா