azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 28 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 28 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Real bliss can be won only by means of the transformation of impulses that agitate the mind. It’s not to be found in wealth. You think that a rich man is happy; ask Me, I shall reveal to you that they are full of grief, for they come to Me in large numbers for relief! They have no peace at all. A strong physique doesn’t by itself give peace; nor does scholarship, asceticism or rituals. Only constant dwelling with the Name of the Lord gives unshakable peace, unaffected by the ups and downs of life. It makes man a hero! Sai Baba was a formless Name to you, but now it has come with Form and you can keep the Form in your mind. So too, the Name ‘Rama’ has a form, and you should picture the Form when you repeat the Name; then Name becomes concrete and remembrance of the Name is easier. Live always in the presence of that Form-filled Name. Then life becomes one continuous worship of the Lord! (Divine Discourse, Sep 02, 1958)
The more you develop love, the more you experience happiness and the closer you go to ultimate bliss. - Baba
மனதைக் கிளர்ச்சியுறச் செய்யும் உந்துதல்களை நல்மாற்றம் செய்வதன் மூலமே உண்மையான பேரின்பத்தை அடைய முடியும். அதை செல்வத்தால் அடைய முடியாது. பணக்காரர் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்; என்னைக் கேட்டால், அவர்களிடம் துயரம் நிறைந்துள்ளது; அத்துயரத்தைப் போக்கிக்கொள்வதற்காகவே என்னிடம் அதிக எண்ணிக்கையில் வருகிறார்கள் என்று கூறுவேன். அவர்களுக்கு நிம்மதியே இல்லை. வலுவான உடலோ அல்லது அறிவாற்றல், துறவறம், சடங்கு-சம்பிரதாயங்கள் போன்றவையோ சாந்தியைத் தர முடியாது. இறைவனின் திருநாமத்தை தொடர்ந்து தியானிப்பது மட்டுமே வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளால் பாதிக்கப்படாத அசைக்க முடியாத சாந்தியைத் தரும். அது மனிதனை ஒரு மாவீரனாக்குகிறது! ‘சாயிபாபா’ என்பது உங்களுக்கு ரூபமற்ற திருநாமமாக இருந்தது, ஆனால் இப்போது ரூபத்தோடு வந்துள்ளது. அந்த ரூபத்தை உங்கள் மனதில் நீங்கள் நிலைநிறுத்திக் கொள்ள முடியும். அதுபோலவே, ‘ராமா’ என்ற திருநாமத்திற்கு ஒரு ரூபம் உள்ளது; மேலும், நீங்கள் அந்த திருநாமத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அந்த ரூபத்தை உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும்; பின்னர் அந்த திருநாமம் உறுதியடைந்து, அதை நினைவுகூறுவது சுலபமாகி விடுகிறது. ரூபத்தால் நிறைந்த அந்த திருநாமத்தின் சாந்நித்தியத்தில் எப்போதும் வாழுங்கள். பின்னர் வாழ்க்கை இறைவனின் தொடர் ஆராதனையாக மாறிவிடுகிறது! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 02, 1958)
நீங்கள் எந்த அளவுக்கு ப்ரேமையை வளர்த்துக் கொள்கிறீர்களோ, அந்த அளவுக்கு நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிப்பதோடு, நீங்கள் நிறைவான பேரின்பத்தையும் நெருங்கி விடுகிறீர்கள். - பாபா