azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 25 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 25 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

It is incorrect to say that qualities and attainments needed for temporal progress and spiritual progress are different from each other. The spiritual is only purification of the temporal. Success or failure in both depends on one-pointedness (ekagrata)! For every item of work, one-pointedness is very important. This too is but a spiritual discipline. There are two paths along which this spiritual discipline may proceed: no-pointedness and many-pointedness! No-pointedness is the stage of sleep; it is also called the quality of ignorance (tamoguna). Many-pointedness is the result of the restless quality (rajoguna), turning the vision of the opened eye on creation and its sights. Avoiding both of these, without falling into these two extremes, if the eye is neither closed as in sleep nor opened wide as in the fully awakened stage, but half-opened and directed to the point of the nose, the pure quality (satwaguna) will become one’s nature, and concentration of the mind can also be easily acquired! (Dhyana Vahini, Ch 8)
There is always a battle raging in the body between vice and virtue, and only the one with ekagrata (one-pointedness) can come out victorious. - BABA
நிலையற்ற உலக விஷயங்கள், ஆன்மிகம் - இவ்விரண்டிலும் முன்னேறுவதற்குத் தேவையான சத்குணங்களும் திறன்களும் வெவ்வேறானவை என்றெண்ணுவது சரியல்ல. உலக விவகாரங்களைப் பரிசுத்தப்படுத்துவதே ஆன்மிகமாகும். அதில் வெற்றி, தோல்வி என்பது ஒருமுகமுனைப்பைப் (ஏகாக்ரதை) பொறுத்தது! ஒவ்வொன்றிற்கும் ஒருமுகமுனைப்பு அத்தியாவசியம். இதுவும் கூட ஒரு ஆன்மிக சாதனையே. இந்த சாதனையில் இரண்டு மார்க்கங்கள் உள்ளன: ஒன்று முனைப்பின்மை, மற்றொன்று பன்முக முனைப்பு! கண் மூடிய உறக்க நிலைதான் முனைப்பின்மையாகும்; இதுவே அறியாமை (தமோகுணம்) என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணைத் திறந்து நம் பார்வையை படைப்பு மற்றும் அதன் அம்சங்களின் மீது வைத்திருக்கும் ரஜோகுணமே பன்முகமுனைப்பாகும். அவ்வாறின்றி, இந்த இரண்டு விதமான நிலைகளை, அதாவது கண்களை முழுமையாக மூடியிருப்பது அல்லது முழுமையாக திறந்திருப்பது ஆகியவற்றைத் தவிர்த்து, பாதி திறந்த கண்ணோடு மூக்கின் நுனியில் கவனத்தைச் செலுத்தினால், ஸத்வகுணம் ஒருவருடைய இயல்பாக ஆகிவிடும்; அப்படி இருந்தால் மனக்குவிப்பையும் சுலபமாக அடைய முடியும்! (தியான வாஹினி, அத்தியாயம்-8)
உடலுள் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையில் போர் எப்பொழுதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது; இதில் ஏகாக்ரதை (ஒருமுகமுனைப்பு) உள்ளவர் மட்டுமே வெற்றி பெற முடியும். - பாபா