azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

This is not devotion - this holding a garland in the hand and indulging in paltry conversation in holy places. I do not want nor do I appreciate anyone bringing flowers and fruits into My presence. Bring Me the fragrant flower of a pure heart and the fruit of a spiritual-discipline-mellowed mind — that is what I like most, not these things available outside yourselves for cash, without any effort that elevates the mind. To get a taste for that kind of effort, you must keep the company of great and good men and take delight in good thoughts. By whatever means available, increase the stock of your bliss (ananda) and improve the quality of discrimination and try to store as much of these two as possible, so that you can draw upon the stock whenever the need arises! (Divine Discourse, Sep 01, 1958)
If only you observe the disciplines and purify the consciousness, you can see the God installed in your heart. - Baba
புனிதத்தலங்களில், கையில் ஒரு பூமாலையை வைத்துக்கொண்டு வெட்டிப்பேச்சுக்களில் ஈடுபடுவது பக்தியே அல்ல. என்னிடத்தில் யாரும் பூக்களையும், பழங்களையும் கொண்டு வருவதை நான் விரும்புவதுமில்லை, அதைப் பாராட்டுவதுமில்லை. நறுமணமுள்ள பரிசுத்தமான இதயம் எனும் மலரையும், ஆன்மிக சாதனையால் கனிந்த மனம் எனும் பழத்தையும் என்னிடம் கொண்டு வாருங்கள் - நான் மிகவும் விரும்புவது இவற்றையே; மனதை மேம்படுத்திடும் எந்த முயற்சியும் இன்றி, உங்களுக்கு வெளியில் காசுக்குக் கிடைக்கும் இவற்றை அல்ல. அத்தகைய முயற்சியின் சுவையைப் பெற, நீங்கள் ஆன்றோர் மற்றும் நல்லோருடன் பழக வேண்டும், நற்சிந்தனைகளில் களிப்புற வேண்டும். எந்த வழியிலாவது உங்களுடைய ஆனந்தத்தின் அளவை அதிகரித்து, பகுத்தறிவின் தரத்தை மேம்படுத்தி, இவ்விரண்டையும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் இந்த சேமிப்பிலிருந்து எடுத்துப் பயன்படுத்திக் கொள்ள முடியும்! (தெய்வீக அருளுரை, செப்டம்பர் 01, 1958)
நீங்கள் மட்டும் ஒழுக்கங்களைக் கடைப்பிடித்து உள்ளுணர்வை பரிசுத்தப்படுத்திவிட்டால், உங்களுடைய இதயத்தில் இறைவன் கொலுவீற்றிருப்பதை நீங்கள் காண முடியும். - பாபா