azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Man is misusing the talents given to him by the Divine. He is giving free vent to the six cardinal vices of lust, anger, greed and so on. They are not the gifts of the Divine. They have been fostered by the food people eat. They are animal qualities which have to be got rid of. People should speak the truth and avoid speaking what is unpleasant even if it is the truth. The entire gamut of human life should be based on truth. Bharatiya (Indian) culture has placed the foremost emphasis on “Speak the truth; act righteously.” Speaking truth is a supreme virtue for all people, anywhere. In any circumstance, one should adhere to the truth. Truth is God incarnate. Righteousness should accompany one like a shadow. When you have truth and righteousness as your guiding stars you can achieve anything in life. All powers are inherent in these two virtues. (Divine Discourse, May 11, 1998)
Truth and righteousness are the two most important limbs of a human being. When truth and righteousness go together, love manifests. - Baba
இறைவன் அளித்த திறமைகளை மனிதன் தவறாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறான். அவன் ஆறு தீய குணங்களான காமம், க்ரோதம், லோபம் போன்றவற்றை கட்டவிழ்த்து விட்டிருக்கிறான். இவை இறைவன் அளித்த பரிசுகளல்ல. மக்கள் உண்ணும் உணவின் மூலம் இவை வளர்க்கப்பட்டுள்ளன. இவை விட்டொழிக்கப்பட வேண்டிய மிருக குணங்கள். மனிதர்கள் சத்தியத்தைப் பேச வேண்டும்; விரும்பத்தகாததை, அது சத்தியமாக இருந்தாலும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். மனித வாழ்க்கை முழுவதும் சத்தியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். பாரத கலாசாரம், "சத்தியத்தையே பேசு, தர்மத்தின்படி நட" என்பதற்குத்தான் பிரதான முக்கியத்துவம் அளித்துள்ளது. எங்கிருப்பினும் சத்தியத்தை பேசுவதே எல்லா மனிதர்களுக்கும் தலைசிறந்த நற்குணமாகும். எந்தச் சூழ்நிலையிலும் ஒருவர் சத்தியத்தைப் பற்றியே ஒழுக வேண்டும். சத்தியம் இறைவனின் அவதாரமாகும். தர்மம் ஒருவரை நிழல் போலத் தொடர்ந்து வர வேண்டும். சத்தியமும், தர்மமும் உங்களுடைய வழிநடத்தும் நட்சத்திரங்களாக இருந்தால் நீங்கள் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். அனைத்து சக்திகளும் இந்த இரண்டு நற்பண்புகளில் பொதிந்துள்ளன. (தெய்வீக அருளுரை, மே 11, 1998)
சத்தியமும் தர்மமும் ஒரு மனிதனின் இரண்டு மிக முக்கியமான அங்கங்கள். சத்தியமும் தர்மமும் ஒன்றிணைந்து செல்லும்போது, ப்ரேமை வெளிப்படுகிறது. - பாபா