azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 13 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 13 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

“Manava seva is Madhava seva” - service of man is service of God. But, when? When you feel in the depth of your heart that the person whom we serve is a wave of the same sea from which you derive your individuality, your taste, name and form. I have called you as ‘Volunteers’ to give you an opportunity to practice this Sadhana of Madhava seva through Manava seva. Don’t, therefore, take this as a new authority conferred on you, or as a burden that has landed on your shoulders. Acceptance of the Will of God has its own advantage; it yields rich fruits! Hanuman didn’t become conceited when Rama selected him for the crucial southward search and when Rama gave into his custody the ring to be given to Sita (assuring him in the process that he would certainly succeed in discovering her); nor was he affected by fear, at the tremendous responsibility that was heaped on him! He just accepted what was given; he was neither happy nor unhappy. He felt that Rama, the Lord, knows all and so his duty was only to obey! (Divine Discourse, Nov 22, 1967)
When you approach God and seek his help and guidance, you have taken the first step to save yourself. You are then led to accept His will as your own. Thus you achieve peace. - Baba
‘மானவ சேவையே மாதவ சேவை’ - மனிதனுக்கு ஆற்றப்படும் சேவையே இறைவனுக்கு ஆற்றும் சேவையாகும். ஆனால் எப்போது? உங்களுடைய தனித்துவம், சுவை, நாம, ரூபம் ஆகியவற்றை எந்தக் கடலிலிருந்து பெறுகிறீர்களோ, அதே கடலின் அலைதான் நீங்கள் சேவை செய்கின்ற நபர் என்பதை உங்கள் இதயபூர்வமாக நீங்கள் உணரும்போதுதான். மாதவ சேவை எனும் இந்த சாதனையை மானவ சேவை மூலம் பயிலும் வாய்ப்பை உங்களுக்கு அளிப்பதற்காகவே உங்களுக்கு ‘சேவாதளத் தொண்டர்கள்’ என்று பெயர் சூட்டியுள்ளேன். எனவே, இதை உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய அதிகாரமாகவோ அல்லது உங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட சுமையாகவோ எடுத்துக்கொள்ளாதீர்கள். இறைவனுடைய சங்கல்பத்தை ஏற்றுக்கொள்வதில் அதற்கே உரித்தான நன்மைகள் உள்ளன; இது மிகுந்த பலன்களைத் தர வல்லது! தென்திசையில் தேடும் மிக முக்கியமான பணிக்கு அனுமனை ராமர் தேர்ந்தெடுத்தபோதும், சீதையைக் கண்டுபிடிப்பதில் நிச்சயம் வெற்றி பெறுவார் என்று அனுமனிடம் ராமர் உறுதியளித்து, அன்னையிடம் அளிக்கவேண்டிய கணையாழியை ராமர் அவரிடம் கொடுத்தபோதும் அனுமன் கர்வம் கொள்ளவில்லை; தனக்கு கொடுக்கப்பட்ட மிகப்பெரும் பொறுப்பைக் கண்டும் அச்சம் கொள்ளவில்லை. தனக்கு கொடுக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டார்; அதற்காக அவர் மகிழ்ச்சியுற்றோ, மகிழ்ச்சியற்றோ இருக்கவில்லை. இறைவனாகிய ராமர் அனைத்தையும் அறிந்தவர் என்றும், கீழ்ப்படிவது மட்டுமே தன் கடமை என்றும் அவர் உணர்ந்திருந்தார்! (தெய்வீக அருளுரை, நவம்பர் 22, 1967)
நீங்கள் இறைவனை அணுகி அவருடைய உதவியையும் வழிகாட்டுதலையும் நாடும் போதே, உங்களைக் காத்துக் கொள்வதற்கான முதல்படியை எடுத்து வைத்து விட்டீர்கள். பின்னர் அவருடைய சங்கல்பத்தை உங்களுடையதாக ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகி விடுகிறீர்கள். இவ்வாறாக நீங்கள் சாந்தியைப் பெறுகிறீர்கள். - பாபா