azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 11 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 11 May 2022 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama is the supreme symbol of the power of attraction. This Rama is not the son of Dasharatha but the spiritual Rama who is the Atma-Rama (the Indweller in every heart). The Atma is the universal magnet which attracts everything. When you keep a flower here, bees are attracted from afar. They are drawn to the flower because of the sweet honey in it. Not a single bee will be attracted by a plastic flower. The sweetness that attracts people is Prema (love). This love may be manifested in many forms - maternal love, filial love, fraternal affection, marital love, friendly love and so on. Divine Love is the basis of all these forms of attraction. It is a powerful magnet. It is present everywhere, including in every human being. Every child bears the imprint of its parents. As all human beings have come from God, they should carry the marks of the Creator. Man has taken birth to manifest the Divine in him. (Divine Discourse, Jul 20, 1997)
God is love personified. You can earn His grace only through love. Love can be conquered only through love. - Baba
ஆகர்ஷண சக்தியின் தலைசிறந்த சின்னமாக ராமர் திகழ்கிறார். இந்த ராமர் தசரதனின் மைந்தன் அல்ல; ஆத்யாத்மீகமாக, ஒவ்வொரு இதயத்திலும் உறைகின்ற ஆத்மாராமர் ஆவார். ஆத்மா என்பது அனைத்தையும் ஈர்க்கும் ப்ரபஞ்சமயமான காந்தமாகும். இங்கு ஒரு பூவை வைத்தால், தூரத்தில் இருந்து தேனீக்கள் ஈர்க்கப்படுகின்றன. பூவில் உள்ள இனிமையான தேன் காரணமாக அவை ஈர்க்கப்படுகின்றன. ஆனால் ஒரு தேனீ கூட பிளாஸ்டிக் பூவால் ஈர்க்கப்படுவதில்லை. மனிதர்களை ஈர்க்கும் இனிமை ப்ரேமையே. இந்த ப்ரேமை, தாயின் ப்ரேமை, குழந்தையின் ப்ரேமை, உடன்பிறந்தவரின் ப்ரேமை, கணவன்-மனைவியின் ப்ரேமை, நண்பனின் ப்ரேமை என பல வடிவங்களில் இருக்கலாம். எல்லாவிதமான ஈர்ப்புகளுக்கும் தெய்வீக ப்ரேமையே அடிப்படையாக உள்ளது. இது மிகவும் சக்திவாய்ந்த காந்தம் போன்றதாகும். இது எங்கும் உள்ளது, ஒவ்வொரு மனிதருள்ளும் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் அதன் பெற்றோரின் முத்திரையைக் கொண்டுள்ளது. அதைப்போல, எல்லா மனிதர்களும் இறைவனிடமிருந்தே வந்தவர்களாதலால், அவர்கள் படைத்தவனின் இயல்பை கொண்டிருக்க வேண்டும். தன்னுள் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்தவே மனிதன் பிறவி எடுத்துள்ளான். (தெய்வீக அருளுரை, ஜூலை 20, 1997)
இறைவன் ப்ரேமையின் திருவுருவம். நீங்கள் அவன் அருளை ப்ரேமையின்மூலமே பெறமுடியும். ப்ரேமையை ப்ரேமையால் மட்டுமே வெல்ல முடியும்.